தமிழகத்தில் வருகிற 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.  இதில் இருபத்தி ஒன்று மாநகராட்சிகள், நூற்று முப்பத்தி எட்டு நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தமாக தமிழகத்தில் (Tamilnadu) 649 இடங்களில் இத்தேர்தல் நடைபெற உள்ளது.  தேர்தல் அறிவிப்பு வெளியானதிலிருந்து அனைத்து கட்சிகளும் தங்களது வெற்றியை நிலைநாட்ட தீவிர பணியில் ஈடுபட்டு வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | விஜய் ரசிகர்கள் அமர்க்களம் - மேள தாளங்கள் முழங்க வேட்புமனு தாக்கல்...!


கொரோனா நோய் (Corona Virus)பரவலுக்கு மத்தியிலும் பல வேட்பாளர்கள் தொடர்ந்து தேர்தலுக்கான பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில் இத்தேர்தலில் முறைகேடுகள் நிகழாத வண்ணம் அதனை கண்காணிக்க சிறப்பு குழுக்களை தேர்தல் ஆணையம் நியமித்து வருகிறது.  அந்த வகையில் தற்போது நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான நடவடிக்கைகளை கண்காணிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் 699 மூத்த அதிகாரிகள் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ளனர்.



வட்டார பார்வையாளர்கள் பணிகள் குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நியமிக்கப்பட்ட வட்டார பார்வையாளர்கள் covid-19 தொடர்பான நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளை 100% சரியாக கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.  வேட்புமனு தாக்கல் வேட்பு மனுக்களை ஆய்வு செய்தல் வேட்புமனுக்களை திரும்பப் பெறுதல் போன்ற நிகழ்வுகளை சிசிடிவி மூலம் பதிவு செய்வதை உறுதிப்படுத்த வேண்டும்.



மேலும் தேர்தல் குறித்து பொதுமக்கள், அரசியல் கட்சி பிரதிநிதி மற்றும் வேட்பாளர்களிடம் இருந்து வரும் புகார் மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.  அதனைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை மையத்தில் போதிய அடிப்படை வசதிகள் இருப்பதை உறுதி செய்தல் உள்ளிட்ட முன்னேற்பாடு நடவடிக்கைகளை நியமிக்கப்பட்ட அதிகாரிகள் வட்டார அளவில் கண்காணிக்க வேண்டும்.  மேலும் மாவட்ட தேர்தல் பார்வையாளர்கள் இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களுக்கு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் நடைபெறும் தேர்தல் நிகழ்வுகளை கண்காணித்து உடனுக்குடன் தகவல் தெரிவிப்பதற்காகவும் வட்டார பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்' என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.


ALSO READ | NEET: நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பினார் தமிழக ஆளுநர்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR