69_வது இந்திய குடியரசு தினவிழா இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. குடியரசு தினவிழாவையொட்டி நாடு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. குறிப்பாக தலைநகரம் டில்லியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மார்க்கெட் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டு உள்ளனர். எந்தவித அசம்பாவிதத்தையும் தடுக்கும் அளவில், பாதுகாப்பு வளையத்துக்குள் டில்லி கொண்டு வரப்பட்டுள்ளது.


தமிழக அரசின் சார்பில் சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை முன்பு குடியரசு தின விழா இன்று காலை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. 


குடியரசு தின விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் முதல் முறையாக கொடியேற்றுவார். இந்த விழாவில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் கலந்துக்கொள்கிறார். மேலும் இந்த நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் பி.தனபால், ஐகோர்ட்டு தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகள், அமைச்சர்கள், அரசு செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், வெளிநாட்டு தூதர்கள், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.


இன்று சரியாக காலை 8 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தேசிய கொடியை ஏற்றி வைப்பார். பின்னர் அணிவகுப்பு மரியாதையை கவர்னர் ஏற்றுக்கொள்வார். பின்னர் வீர, தீர செயலுக்கான பதக்கங்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்குவார்.