தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பார் கிராமத்தைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவரின் மகன் அஸ்வின் குமார் (7). அஸ்வின் குமார் புதன்கிழமை காலை 9 மணி அளவில் கடலோர காவல் நிலையத்திற்கு எதிரில் உள்ள அவரது  வீட்டின் முன்பு மர்மமான முறையில் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனை அடுத்து சிறுவனின் உடலை கைப்பற்றிய சூரங்குடி காவல் நிலைய போலீசார், தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் வேம்பார் கிராமத்தை சேர்ந்த தாமஸ் (19) என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை மேற்கொண்டதில்.  தாமஸ் கஞ்சா போதையில் வீட்டிற்குள் தனியாக இருந்த 7 வயது சிறுவனை தாமஸ் பாலியல் வண்புணர்வு செய்ய முயன்றுள்ளான்.


மேலும் படிக்க | செந்தில் பாலாஜி தம்பி வீட்டில் திடீர் சோதனை: ஜாமீன் விஷயத்தில் செக் வைக்க திட்டம்..!


அப்போது சிறுவன் வீட்டில் கத்தி அலறியுள்ளான்,  இதனால் ஆத்திரம் அடைந்த தாமஸ் தான் வைத்திருந்த சிறிய ரக இரண்டு கக்திகளால் சிறுவன் அஸ்வின் குமாரை கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.  மேலும் தாமஸை சூரங்குடி காவல் நிலைய போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  மேலும் தாமஸ் மீன் பிடி தொழில் செய்து வந்ததாகவும்  எப்போதும் கஞ்சா மற்றும் மது போதையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.  மேலும் இதுகுறித்து சூரங்குடி காவல் நிலைய போலீசார் 7 வயது சிறுவன் அஸ்வின் குமாரின் பிரேத பரிசோதனை தற்போது தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நடைபெற்று வருகிறது. உடற்கூறாய்வு முடிந்த பிறகு சிறுவன் கொலை செய்யப்பட்ட பின்னணி முழுமையாக தெரியவரும் என தெரிவித்துள்ளனர்.


மேலும் படிக்க | டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாள் லீவு..! எந்தெந்த தேதிகள் தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ