தமிழகத்தில் ஒரே நாளில் 79,599 வழக்குகளுக்கு தீர்வு
தமிழகம் முழுவதும் நடந்த தேசிய லோக் அதாலத்தில் 79,599 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழு தெரிவித்துள்ளது.
லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் சமாதானநிலை மற்றும் சமரசம் மூலம் மக்களின் பிரச்சனைகளை தீர்க்க இந்திய அரசால் உருவாக்கப்பட்ட நீதிமன்றம் ஆகும். இந்த 'தேசிய லோக் அதாலத்' தமிழகத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நேற்று நடைபெற்றது.
அவ்வாறு தமிழகத்தில் நேற்று நடந்த 'தேசிய லோக் அதாலத்' நிகழ்வுக்காக, சென்னை ஐகோர்ட்டில் 4 அமர்வுகளும், மதுரை ஐகோர்ட்டில் 4 அமர்வுகளும், மாவட்ட மற்றும் தாலுகா அளவுகளில் என மாநிலம் முழுவதும் மொத்தம் 419 அமர்வுகள் நடைபெற்றன.
மேலும் படிக்க | சவுதி அரேபியாவில் மாற்றத்திற்கான விதை; மெக்காவில் பெண் பாதுகாவலர்
இந்த 'தேசிய லோக் அதாலத்' மூலம் மொத்தமாக ரூ.334,91,11,545 மதிப்பிலான 79,599 வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டன என்பது குறிப்பிடதக்கது. இதில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் 63,348 மற்றும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வராத 12,251 வழக்குகளும் அடங்கும்.
இந்த நிகழ்வில் 2,004 செக் மோசடி வழக்குகளில் இரு தரப்பினருக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு சம்மந்தப்பட்டவர்களுக்கு ரூ. 49,97,23,381 பணம் செட்டில் செய்ய உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, 3,157 மோட்டார் வாகன விபத்து வழக்குகளில் தீர்ப்பளிக்கப்பட்டு ரூ.144,85,25,246 இழப்பீடு வழங்கப்பட்டது. மேலும் 7,301 சிவில் வழக்குகளில் ரூ. 33,60,32,130 இழப்பீடு வழங்கப்பட்டது.
மேலும் படிக்க | ஒரே நாளில் 81 பேருக்கு மரணதண்டனை! சவூதி அரேபியாவின் கடுமையான தண்டனை
தொழிலாளர் பிரச்சினை தொடர்பான 20 வழக்குகளில் 71 லட்சத்து 50 ஆயிரத்து 900 ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 106 குடும்ப நல வழக்குகளுக்கு இந்த லோக் அதாலத்தில் தீர்வு காணப்பட்டுள்ளதாக தெரிகிறது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR