திருச்சி அருகே நிகழ்ந்த சாலைவிபத்தில் லாரி மீது கார் மோதி 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னையிலிருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த கார் சமயபுரம் சுங்கச்சாவடி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயமடைந்த 4 பேரும் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


இந்த கோர விபத்து குறித்து தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர். மேலும் விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.