2 மாதக் கை குழந்தையுடன் 12 மணி நேர படகு பயணம்... அதிகரிக்கும் அகதிகளின் எண்ணிக்கை!
இலங்கையில் நீடித்து வரும் பொருளாதார நெருக்கடியினால் இரண்டு மாத கை குழந்தையுடன் மேலும் 8 பேர் அகதிகளாக தனுஷ்கோடிக்கு வந்தடைந்தனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு வாழும் மக்கள் அண்றாட வாழ்க்கையை வாழவே கஷ்டப்பட்டு வருகின்றனர். அரிசி, பருப்பு, பால், எரிபொருள் என அனைத்துமே விலைவாசி விண்ணை தொடும் உச்சத்தில் உள்ளது.
இதன் காரணமாக இடையில் பதவிக்கு வந்த ரணில் விக்ரமசிங்கேவையும் பதவி விலகக்கோரி மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். உலக நாடுகளிடம் இருந்து ஏற்கெனவே லட்சம் கோடிக்கு மேல் கடன் பெற்றுள்ள இலங்கை அரசு, பணத்தை திரும்பக் கொடுப்பது தற்போதைய சூழ்நிலையில் நிகழாது என தெரிவித்தது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் படிக்க | விரைவில் முடிகிறது விடுதலை - உற்சாகத்தில் சூரி
புதிய அமைச்சர்கள், வங்கி ஆளுநர் என அனைத்து பதவிகளுக்கும் புதிய நபர்கள் பொருப்பேற்ற பின்பும் எவ்வித மாற்றமும் இன்றி இலங்கை இன்னமும் தத்தளித்து வருகிறது. இதனால் பலர் வேறு நாடுகளுக்கு தப்பியோடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிலும் பணம் உள்ளவர்கள் பணத்தின் பலத்தால் நாடு விட்டு நாடு செல்கின்றனர். ஆனால் பணம் இல்லாதவர்கள் சட்டத்திற்கு விரோதமாக ஆபத்தான முறையில் சிறிய வகை படகுகளில் கடல் தாண்டி கண்டம் கடக்கின்றனர்.
இலங்கை மக்கள் அகதிகளாக தமிழ்நாடு, ஆஸ்திரேலியா என பல்வேறு இடங்களுக்கு சென்று தஞ்சம் அடைவது வாடிக்கையாகி வருகிறது. அவ்வாறு இந்தியாவிற்குள் நுழையும் இலங்கை மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது என்பது குறிப்பிடதக்கது. கடந்த மார்ச் மாதத்திலிருந்து நேற்று வரை 133 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்துள்ளனர்.
மேலும் படிக்க | உதகை அருகே தலைகுந்தா பகுதியில் கோவிலுக்குள் நுழைந்த கரடி
இந்நிலையில் இலங்கை யாழ்பாணம் மாவட்டம் கிருபாகரன் அவரது மனைவி சாந்தி மற்றும் அவர்களது இரண்டு மகள்கள் மேலும் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சந்திரகுமார் , அவரது மனைவி டெலிசித்திரம், அவர்களது இரண்டு மாத கைக்குழந்தை என மொத்தமாக 8 பேர் இலங்கையிலிருந்து படகில் நேற்று காலை புறப்பட்டு தனுஷ்கோடி அருகே உள்ள மூன்றாம் மணல் தீடை பகுதிக்கு நேற்று இரவு வந்து இறங்கினர்.
தகவலறிந்து மண்டபம் கடலோர காவல் படையினர் மூன்றாவது மணல் தீடையிலிருந்த இலங்கைத் தமிழர்களை
ஃஹேவர் கிராஃப்ட் படகு மூலம் மீட்டு தனுஷ்கோடி அரிச்சல்முனை கரைக்கு கொண்டு வந்து ராமேஸ்வரம் மரைன் போலீசாரம் ஒப்படைத்தனர்.
விசாரணைக்கு பிறகு 8 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட உள்ளனர். மேலும் தமிழகத்திற்கு இலங்கையிலிருந்து வந்த அகதிகளின் எண்ணிக்கை 141 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ