விருதுநகர் மாவட்டத்தில் 9 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட நிலையில் கிணற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டான். கடந்த ஒரு வருடமாக இந்த வழக்கு விசாரணை நடைப்பெற்று வந்த நிலையில், தற்போது அதில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குழந்தை உயிரிழப்பு:


விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம் பண்ணையை சேர்ந்தவர் கோபால்.  இரும்பு வியாபாரியாக இருக்கிறார். இவரது மனைவி உயிரிழந்து சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். இவருக்கு ஒரு மகன் இருக்கிறார். தனது 9 வயது மகன் பரந்தாமனை கோபால் மனைவியின் உயிரிழப்புக்கு பிறகு வளர்த்து வந்தார்.  இவர், கடந்த 2 ஆண்டுகளாக அதே பகுதியைச் சேர்ந்த கவுசல்யா என்ற 33 வயது பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். 


கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 13ஆம் தேதியன்று சிறுவன் பரந்தாமன் காணாமல் போயுள்ளான். அக்கம் பக்கத்தினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதை தொடர்ந்து, அச்சிறுவன் அதே பகுதியில் உள்ள கிணற்றில் சடலமாக  மிதந்துள்ளான். இது குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் உதவியுடன் அச்சிறுவனின் உடல் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டது. பிணமாக கண்டெடுக்கப்பட்ட சிறுவனின் கழுத்தில் கயிற்றை வைத்து இறுக்கியதற்கான அடையாளம் தெரிந்தது. அதே போல, சிறுவன் கழுத்து நெறிக்கப்பட்டு உயிரிழந்தது உடற்கூறு ஆய்வில் தெரியவந்தது. இந்த வழக்கை போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.


மேலும் படிக்க | ‘அப்பாடா..’ தமிழகத்தில் தக்காளி விலை அதிரடி குறைவு..! ஒரு கிலோ இவ்வளவுதானா..?


திடுக்கிடும் திருப்பம்..!


சிறுவனின் தந்தையுடன் குடும்பம் நடத்தி வந்த கௌசல்யாவின் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இந்தநிலையில் அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் கவுசல்யா, அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் சேது காமேஷ் என்ற 40 வயது நபரை காதலித்து வருவது தெரிய வந்தது. கோபால் இல்லாத நேரத்தில் காமேஷுடன் கள்ளக்காதல் செய்து வந்ததுடன் அவரது வீட்டிற்கும் சேது காமேஷை அவ்வப்போது வரவழைத்து உல்லாசமாக இருந்துள்ளார். இதை நேரில் கண்ட சிறுவன் பரந்தாமன் தன் தந்தையிடம் இந்த விஷயத்தை கூற போவதாக தெரிவித்துள்ளான். இதனால் ஆத்திரமடைந்த கவுசல்யாவும் சேது காமேஷும் சிறுவனின் கழுத்தை நெறித்து கொன்றுள்ளனர். பின்பு, அப்பகுதியில் உள்ள கிணற்றில் போட்டதாக விசாரணையில் கௌசல்யா தெரிவித்துள்ளார். இதையடுத்து கெளசல்யாவை கைது செய்த ஏழாயிரம் பண்ணை போலீசார் சேது காமேஷை தேடி வருகின்றனர்.


மேலும் படிக்க | சிறுவனின் கொலையில் திடீர் திருப்பம்..! பாலியல் வன்கொடுமை செய்து கொன்றது அம்பலம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ