அரசு மருத்துவமனை கட்டில் உடைந்து பிறந்து 5 நாளே ஆன குழந்தையின் தலையில் பலத்த காயம்
விருதுநகர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் தரமற்ற கட்டில் உடைந்து விழுந்ததில் பிறந்து 5 நாள் ஆன ஆண்குழந்தை தலையில் பலத்த காயம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் பரங்கிநாதபுரத்தை சேர்ந்தவர் முனியசாமி.இவரது மனைவி முத்துலட்சுமியின் இரண்டாவது பிரசவத்திற்காக கடந்த புதன்கிழமை விருதுநகர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். கடந்த வியாழக்கிழமை இவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், தாய் மற்றும் குழந்தை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் எதிர்பாராதவிதமாக அரசு மருத்துவமனையின் கட்டில் உடைந்து குழந்தை கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் அடைந்ததாக கூறப்படுகிறது.
குழந்தையை ஸ்கேன் செய்து பார்த்ததில் குழந்தையின் தலையில் பலத்த காயம் இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து குழந்தையின் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.
மேலும் படிக்க | பள்ளி மாணவியை கடத்திய டான்ஸ் மாஸ்டர் போக்சோவில் கைது..!
நீண்ட நேரமாகியும் குழந்தையை கொண்டு செல்ல உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மருத்துவ நிர்வாகத்தை கண்டித்தும் தரமற்ற கட்டில், வாகனங்கள் போன்றவை மருத்துவமனையில் இருப்பதாக பெற்றோர்கள் உறவினர்கள் குற்றம் சாட்டினர். இதையடுத்து குழந்தை மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அரசு மருத்துவமனையில் கட்டில் உடைந்து குழந்தை காயம் அடைந்துள்ள விவகாரம் விருதுநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தனி விசாரணைக் குழு
விருதுநகர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் கட்டில் உடைந்து 5 நாள் குழந்தை காயமடைந்த விசாரிப்பதற்காக தனி விசாரணைக் குழு அமைக்கப்பட்டு இருப்பதாகவும் அந்த குழுவின் விசாரணை அறிக்கை நாளை சமர்ப்பிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் சங்குமணி தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | கடலூரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை: காதலன் கண் முன்னே காதலிக்கு நேர்ந்த துயரம்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR