நாடுமுழுவதும் நிகழ்ந்த ஆறு சுவாரஸ்யமான செய்திகளின் தொகுப்பு உங்களுக்காக கீழே அளிக்கப்பட்டுள்ளது.


  • COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    காங்கிரஸ் சேவா தளத்தின் தேசிய பயிற்சி முகாம்


மத்திய பிரதேசத்தின் போபாலில் நடைபெறும் காங்கிரஸ் சேவா தளத்தின் தேசிய பயிற்சி முகாமில் அவதூறான துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதன்போது வெளியிடப்பட்ட புத்தகங்களில், வீர் சாவர்க்கரை ஓரின சேர்க்கையாளர் என்று வர்ணிக்கப்பட்டுள்ளது. சாவர்க்கர் மீது பாலியல் குற்றச்சாட்டும் பதிவிடப்பட்டுள்ளது. மேலும் ராவணன் சீதை பற்றிய பல சர்ச்சைக்குரிய தகவல்களும் இடம் பெற்றுள்ளன


மேலும், பாஜகவின் கொள்கைகள் இழிவானதாகவும் தவறானவை என்றும் கூறப்பட்டுள்ளது.  இதை வீர் சாவர்க்கர் மற்றும் RSS-க்கு எதிரான காங்கிரஸின் சதி என்று பாஜக கண்டித்துள்ளது. இதை பொறுத்துக் கொள்ள முடியாது என்று பாஜக செய்தித் தொடர்பாளர் ரஜ்னீஷ் அகர்வால், தெரிவித்துள்ளார். மேலும் பாஜகவுக்கு எதிராக இதுபோன்ற காங்கிரஸ் சதித்திட்டங்கள் ஒருபோதும் வெற்றி பெறாது என்று அகர்வால் குறிப்பிட்டுள்ளார்.


  • மகாராஷ்டிராவின் ஏழை மக்களுக்கு பத்து ரூபாய்க்கு உணவு


மகாராஷ்டிராவின் உத்தவ் தாக்கரே அரசு இப்போது சிவ்போஜன் திட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு பத்து ரூபாய்க்கு உணவு வழங்க முற்பட்டுள்ளது. இந்த திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் அமல்படுத்தப்பட்டுள்ளது. தினசரி மதியம் இந்த உணவு விற்கப்படும். இதற்கான விற்பனை மையத்தில் பகல் பன்னிரண்டு மணி முதல் மதியம் இரண்டு மணி வரை கிடைக்கும். அதில் 30 கிராம் ரொட்டி, 100 கிராம் காய்கறிகள், 150 கிராம் அரிசி, 100 கிராம் பயறுவகை தரப்படும்.  


இந்த உணவகங்களில் அரசு ஊழியர்கள் சென்று சலுகைக் கட்டணத்தில் சாப்பிட அனுமதியில்லை. சிவ்போஜன் திட்டம் 3 மாதங்களுக்கு செயல்படுத்தப்படும். அதற்கு கிடைக்கும் வரவேற்பை பொருத்து மேலும் விரிவு படுத்தப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. இதற்காக 6 கோடியே 48 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மையத்திலும் அதிகபட்சம் 500 பேருக்கு உணவு வழங்கப்படும். உணவு தயாரிப்புக்காக ஒரு சாப்பாடுக்கு நகரங்களில் தலா 50 ரூபாயும், கிராமங்களில் 35 ரூபாயும் மாநில அரசால் செலவிடப்படும் ...


  • இறந்த பசுவிற்கு மேளதாளத்துடன் ஈமச்சடங்கு


உத்தரபிரதேச மாநிலம் மஹோபாவில், விவசாயி ஒருவர் தனது வளர்ப்புப் பசு இறந்ததால் அதற்கு மேளதாளத்துடன் ஈமச்சடங்குகள் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பசுவின் அஸ்தியை கங்கை நீரில் அவர் கரைத்துள்ளார்.


முன்னதாக பசுவின் உடலை வண்டியில் ஏற்றி அதன் கன்றுகள் இழுத்துச் செல்ல வைத்தார். இது மனிதர்கள் செய்யும் ஈமக்காரியங்கள் போல அமைந்தது. இந்தப் பசு ஜென்மாஷ்டமி தினத்தன்று பிறந்ததால் பசுவுக்கு கிருஷ்ணா என்று பெயர் சூட்டப்பட்டியிருந்தார். 


கிருஷ்ணாவுக்கு கடந்த 25 நாட்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. பல்வேறு சிகிச்சைகளை செய்தும் அதைக் காப்பாற்ற முடியாமல் இறந்ததை அந்த விவசாயிக்கு மனம் தாங்கவில்லை. இந்நிலையில் தனது பசுவுக்கு புதுமையாக ஈமச்சடங்குகளை செய்தார்.


  • ஒரு பெண்புலியை அதன் ஜோடியான ஆண்புலி கடித்துக் கொன்ற சோகம்


ராஜஸ்தானின் உதய்பூரின் உயிரியல் பூங்காவில் ஒரு பெண்புலியை அதன் ஜோடியான ஆண்புலி கடித்துக் கொன்றதால் சோகம் ஏற்பட்டுள்ளது.
அந்தப் பூங்காவில் குஜராத்தின் சபர்காந்தாவிலிருந்து கொண்டு வரப்பட்ட குமார் என்ற ஆண் புலி இருந்தது. அதற்கு ஜோடியாக தாமினி என்ற பெண் புலி இருந்தது. இதனிடையே கடந்த சில நாள்களாக இரு புலிகளுக்குள்ளும் மோதல் வந்ததால் இரண்டையும் தனித்தனி கூண்டுகளில் பூங்கா அதிகாரிகள் பிரித்து வைத்திருந்தனர். இந்நிலையில் திடீரென்று அந்த ஆண்புலி குமார், தாமினியின் கூண்டுக்குள் நுழைந்து அதை கொடூரமாக கடித்துக் கொன்றது. இந்த சம்பவத்தை அறிந்து பார்வையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஊழியர்கள் மெத்தனத்தால் தான் தாமினி பலியானதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


  • மூன்று டஜன் மதுபாட்டில்களை கடத்திய குடிமகன்


பீகார் மாநிலம் கோபால்கஞ்சில் ஒருவர் புதுமையான மது கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. ஜீந்திரா என்ற அந்தக் கடத்தல்காரர் தனது உடலில் மூன்று டஜன் மதுபாட்டில்களை டேப்பை சுற்றி கெட்டியாக ஒட்டிக்கொண்டு பைக்கில் கடத்தி வந்தார் ... அவருடன் மேலும் இரண்டு பெண்களும்  பைகளில் மதுபானங்களை மறைத்து வைத்திருந்தனர். இதுபற்றி தகவல் கிடைத்ததால் போலீஸார் அவர்களை மடக்கிப்பிடித்து சோதித்தனர். இதில் ஆடைக்குள் மறைத்து வைத்திருந்த 56 மதுபான பாட்டில்களை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர் ..


  • CAA போராட்டக்காரர்களுக்கு காவல்துறை நோட்டீஸ்


குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக உத்தரபிரதேசத்தின் பிஜ்னோரில் நடந்த வன்முறை போராட்டங்களுக்கு காரணமானவர்களின் வீடுகளுக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர் ... நஹ்தூர் பகுதியில் வசிக்கும் 39 பேரின் வீடுகளில் அந்த நோட்டீஸ் பிரதியை போலீஸார் ஒட்டினர் வன்முறையில் ஈடுபட்ட மேலும் பலருக்கும் விரைவில் நோட்டீஸ் அனுப்பவுள்ளனர். முக்கியக்குற்றவாளிகள் நான்கு பேருக்கு நோட்டீஸ் அனுப்ப மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இருப்பினும், நஜிபாபாத் நகரில் நடந்த வன்முறை தொடர்பாக யாருக்கும் நோட்டீஸ்  அனுப்பப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.