மதுரை மாநகர் பழைய குயவர்பாளையம் பகுதியை சேர்ந்த நாகராஜன் - லாவண்யா தம்பதியினர். இவர்களுக்கு ஒரு பெண்,ஒரு ஆண்  என இரு குழந்தைகளுடன் அதே பகுதியில் வாடகை வீட்டில் வசித்துவருகின்றனர். கணவர் நாகராஜன் பங்குசந்தை ஆலோசகராகவும், முதலீட்டாளராகவும் இருந்துவந்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பங்கு சந்தையில் பல லட்சம் ரூபாய் முதலீடு செய்த நிலையில் திடீரென பங்குச்சந்தையில் ஏற்பட்ட இழப்பீடு காரணமாக பல லட்ச ரூபாய் பணத்தை இழந்து விட்டனர். கடன் வாங்கி பணத்தை முதலீடு செய்த நிலையில் தொடர்ந்து பங்குச்சந்தை சரிவை சந்தித்தால்,  இவரின் முதலீட்டில் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.


இதனால் மனமுடைந்த நாகராஜன் தனது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவைத்த பின்னர் தனது மனைவி லாவண்யாவுடன் வீட்டிற்குள் இருவரும் சேர்ந்து, நேற்று மதியம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதனையடுத்து மாலை குழந்தைகளை அழைத்துசெல்ல தந்தை பள்ளிக்கு செல்லாத நிலையில் இரு குழந்தைகளும் தனது உறவினரின் வீட்டிற்கு சென்றுள்ளனர். 


மேலும் படிக்க | பகீர் தகவல்! இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை ரூ.15 வரை உயரலாம்!


தொடர்ச்சியாக தாய் - தந்தை இருவரையும் தொடர்புகொள்ள முடியாத நிலையில் இரவில் வீட்டிற்கு நேரில் சென்று  கதவு பூட்டப்பட்டிருந்த நிலையில் ஜன்னல் வழியாக பார்த்போது இருவரும் மின்விசிறியில் தூக்கிட்டு தொங்கியபடி தற்கொலை செய்து உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. 


இதனையடுத்து  அருகில் உள்ளவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் தெப்பக்குளம் காவல்துறையினர் நேரில் சென்று விசாரணை நடத்திய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதையடுத்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


கடந்த ஒரு வாரமாக உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக தொடர்ச்சியாக பங்குசந்தையில் தொடர்ந்து சரிவு ஏற்பட்டுவரும் நிலையில் பங்குசந்தை சரிவால் ஏற்பட்ட நஷ்டத்தில் தம்பதியினர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


பங்குசந்தை முதலீடா? பிட் காயின் ஆன்லைன் முதலீடு ? போன்ற ஏதேனும் முதலீடுகள் மூலமாக பணத்தை இழந்துள்ளனரா என்ற கோணத்திலும் காவல்துறை அவரது வீட்டில் உள்ள லேப்டாப், கைபேசி மற்றும் பென் டிரைவ்களை கைப்பற்றி விசாரணை நடத்திவருகின்றனர்.


மேலும் படிக்க | Cyber Attack: கத்தியின்றி ரத்தம் சிந்த வைக்கும் சைபர் தாக்குதல்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR