காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவியை மேல்சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் இல்லாததால் அவர் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காஞ்சிபுரம் நசரத்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் என்பவரின் மகள் சரிதா. இவர் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களாக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்தார். 


இதையடுத்து, பிற்பகல் மாணவியை மேல்சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மருத்துவர் பரிந்துரைத்தார். ஆனால் அவருக்கு ஆம்புலன்ஸ் தராததால் பெற்றோர்கள் அவதியடைந்தனர்.


பின்னர் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டு அவரது உத்தரவின்பேரில் 7 மணிநேரத்திற்கு பின்னர் ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டது. அதில் மாணவி சென்னை அழைத்து வரப்பட்டபோது, வரும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 


இச்சம்பவம் பற்றி அவரது பெற்றோர் கூறிய போது; உரிய நேரத்தில் மருத்துவ நிர்வாகம் ஆம்புலன்ஸ் வழங்காததே உயிரிழப்பிற்கு காரணம் என பெற்றோர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.