Marina Beach: சென்னை மெரினா கடற்கரையில் கரை ஒதுங்கிய கடல் ஆராய்ச்சி தகவல் சேமிப்பு மிதவை
Chennai Marina Beach: தேசிய கடல் ஆராய்ச்சி நிறுவனத்தின் கடல் சார்ந்த ஆராய்ச்சி தகவல்களை சேகரிக்கும் மிதவையானது சென்னை துறைமுக நங்கூரத்திலிருந்து விலகி கடல் அலையின் திசை வேகத்தில் மெரினா கடற்கரையோறம் கரை ஒதுங்கியிருக்கிறது.
தேசிய கடல் ஆராய்ச்சி நிறுவனத்தின் கடல் சார்ந்த ஆராய்ச்சி தகவல்களை சேகரிக்கும் மிதவையானது சென்னை துறைமுக நங்கூரத்திலிருந்து விலகி கடல் அலையின் திசை வேகத்தில் மெரினா கடற்கரையோறம் கரை ஒதுங்கியிருக்கிறது. மெரினா காவல் துறையினருக்கு மீனவர்கள் கொடுத்த தகவல் அடிப்படையில் அதை கடலில் இருந்து மீட்டெடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் சென்னை வேளச்சேரியில் உள்ள (National centre for ocean research க்கு சொந்தமான Floating Data collector கருவி என தெரிய வந்தது உடனடியாக தகவல் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் தலைமை அலுவலகத்தின் விஞ்ஞானி செந்தில் மாற்றும் துறை சார்ந்த ஆராய்ச்சி நிபுணர்கள் தற்பொழுது மெரினா கடற்கரைக்கு வருகை தந்தனர். மேலும் மெரினா மீட்பு குழுவினர் உதவியுடன் கடலிலிருந்து அதை வெளியே எடுக்கப்பட்டது.
மேலும் படிக்க | சென்னை அருகே கரையை கடந்த மாண்டஸ் எத்தனையாவது புயல் தெரியுமா?... ஒரு மினி வரலாறு
இது குறித்து திருவல்லிக்கேணி காவல் சரக உதவி ஆணையர் MS பாஸ்கரன் அவர்கள் கூறுகையில்., சென்னை மெரினா கடற்கரையில் மாண்டஸ் புயல் காரணமாக மெரினா கடற்கரை நடைபாதையில் பல கடைகள் சேதமடைந்து இருக்கிறது அதை காவல்துறையினர் உதவியுடன் சரி செய்து வருகின்றனர். மேலும் இந்த கடற்கரைப் பகுதியில் யாரும் இங்கு வரக்கூடாது எனவும் கடல் சீற்றம் அதிகமாக உள்ளது மழை சாரல் அதிகமாக உள்ளதாகவும் அவர் கூறினார்.
இதற்கிடையில் மெரினா கடற்கரையில் கரை ஒதுங்கிய 6 அடி உயரம் கொண்ட தேசிய கடல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு சொந்தமான மிதவையை பாதுகாப்பாக மீட்டு ஆராய்ச்சியாளர்களிடம் ஒப்படைத்த போலீசாருக்கு ஆராய்ச்சியாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தேசிய கடல் ஆராய்ச்சி மைய ஆராய்ச்சியாளர் செந்தில்குமார் என்பவர் நாட்டின் சொத்தை தமிழக காவல்துறையினர் இக்கட்டான நிலைமையிலும் மீட்டு தரவுகளுடன் ஒப்படைத்ததற்கு நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே இந்த கருவியானது கடல் நீரில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் கடலுக்குள் உள்ள நிலப்பரப்பில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்தும் கடல் நீரின் தன்மைகள் குறித்தும் தேசிய கடல் சார் ஆய்வு மையத்தின் சார்பில் பயன்படுத்தக்கூடிய கருவியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ