விருதுநகர் : ஒரு இடத்தில் சட்டத்திற்குப் புறம்பாக குற்றம் நடந்தால் அதனை தடுக்க வேண்டியது காவல்துறையினரின் கடமை.  ஆனால் அதே காவல்துறையினர் சட்டத்தை மீறி குற்றத்தை செய்தால் அதனை தடுப்பது யார் ? கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் காவலரே, அந்தக் கொள்ளையில் ஈடுபடுவதற்கு திட்டம் தீட்டி கொடுத்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று விருதுநகர் பகுதியில் அரங்கேறியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ TNPSC: குரூப் 2 தேர்வுகளுக்கு நேர்முகத் தேர்வு ரத்து? அரசு பரிசீலனை


விருதுநகர் மாவட்டத்தில் கவிதை நாயக்கன்பட்டியில் உள்ள லட்சுமி நகர் மூணாவது தெருவில் வசித்து வருபவர் கணேசன்(80). இவரின் மனைவி இறந்துவிட்டதால் அவர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.  இவர் வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்து ஓய்வு பெற்றவர்.  இந்நிலையில் வயது மூப்பு அடைந்த இவர் வீட்டில் தனியாக இருந்த பொழுது 26.10.21 அன்று கணேசனின் வீட்டு வாசலுக்கு கார் ஒன்று வந்துள்ளது.  அந்த காரில் இருந்து சரசரவென்று இறங்கிய கும்பல் ஒன்று அதிரடியாக கணேசனின் வீட்டிற்குள் புகுந்து அவர்கள் கொண்டு வந்திருந்த கத்தியை காட்டி கணேசனை மிரட்டினர்.


மேலும் அவரை ஒரு அறையில் கட்டிப் போட்டுவிட்டு பீரோவில் வைத்திருந்த 5 பவுன் நகைகள் மற்றும் ரூ.4 லட்சம் ரொக்கத்தையும் திருடிக்கொண்டு அவர்கள் வந்த காரிலேயே தப்பித்து சென்று விட்டனர்.  அதன் பின்னர் இந்த சம்பவம் குறித்து தாலுகா போலீஸ் நிலையத்தில் கணேசன் புகார் கொடுத்தார்.   இதனையடுத்து கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் 2 தனிப்படைகள் அமைத்து கொள்ளையடித்தவர்களை தீவிரமாக தேடி வந்தனர்.  நேற்றைய தினம் போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த பொழுது காந்தி நகர் பகுதியருகே ஒரு காரில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் 6 நபர்கள் இருந்ததை கண்ட தனிப்படை போலீசார் அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டபோது முன்னுக்குப் பின் முரணான பதிலை அளித்தனர்.


இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை உடனடியாக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணையை தொடங்கினர்.  இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.  அதில் இந்த ஆறு பேருக்கும் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் ஏட்டு இளங்குமரன் தான் ஓய்வுபெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் கணேசன் வீட்டில் திருட திட்டம் போட்டுக் கொடுத்தார் என்பது தெரியவந்தது.  அதனைத் தொடர்ந்து கஞ்சநாயகன்பட்டி சேர்ந்த கோபி கண்ணன்(30), ராஜபாளையத்தை சேர்ந்த சம்பத்குமார்(51), திருமங்கலத்தை சேர்ந்த மகேஷ் வர்மா(27), அஜய் சரவணன்(29), மதுரையை சேர்ந்த அலெக்ஸ் குமார்(46) மற்றும் மூர்த்தி(34) ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.  ஆனால் இதற்கு மூளையாக செயல்பட்ட ஏட்டு இளங்குமரன் தலைமறைவாகியுள்ள நிலையில், போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ லாரியையும் முந்திரியையும் கடத்தியவர்களை 24 மணி நேரத்தில் கண்டுபிடித்த தமிழக போலீஸ் Hats Off


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR