ஏ.ஆர். ரஹ்மான் ட்வீட்... ``அழகிய தீர்வு. இந்தி கட்டாயமல்ல, திருத்தப்பட்டது வரைவு``
மத்திய அரசின் திருத்தம் ``அழகிய தீர்வு. தமிழகத்தில் இந்தி கட்டாயமல்ல..
சென்னை: மும்மொழி கல்வித்திட்டத்தில் மத்திய அரசு திருத்தம் செய்ததை அடுத்து, அதுக்குறித்து ட்வீட் போட்டு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான்.
கஸ்தூரிரங்கன் குழுவினர் பரிந்துரை செய்த புதிய கல்விக் கொள்கை வரைவு திட்டத்தின்படி தமிழ்நாடு உள்பட இந்தி பேசாத மாநிலங்களில் மூன்றாவது மொழியாக இந்தியை கட்டாயப்படுத்தல் தொடர்பான பரிந்துறையை மத்திய அரசு கொண்டு வந்தது. இதற்கு பலத்த எதிர்ப்பு வந்த நிலையில், புதிய கல்விக் கொள்கை வரைவு திட்டத்தில் சில திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
அதன்படி இந்தி பேசா மாநிலங்களில் மூன்றவாவது மொழியாக இந்தி கற்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் இந்தி கட்டாயம் என்ற பரிந்துரை நீக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில், ''அழகிய தீர்வு. தமிழகத்தில் இந்தி கட்டாயமல்ல.. திருத்தப்பட்டது வரைவு'' என ஒரு ட்வீட் போட்டு தனது கருத்தை பதிந்துள்ளார்.