சென்னை: தமிழ்நாட்டில் பரவிவரும் டெங்கு தொடர்பான வழக்குகளை மீளாய்வு செய்ய 5 உறுப்பினர்கள் கொண்ட குழுவுடன்; மாநில சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சுகாதார அதிகாரிகள் ஆகியோருடன் சந்திப்பு நடத்துகின்றனர்.



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதாக "தமிழக மக்களை டெங்கு போன்ற நோய்களில் இருந்து பாதுகாக்கும் வகையில் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளுடன் கூடுதலாக ரூபாய் 13 கோடியே 95 இலட்சம் மதிப்பில் கொசு ஒழிப்பு பணிகள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், டெங்கு ஒழிப்பு பணியில் 40,000-க்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். 


தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு அரசு மருத்துவமனையிலும் 24 மணி நேரமும் செயல்படும் காய்ச்சலுக்கான பிரத்யேகமான சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டும்" என சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது!