இந்தியாவில் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 324 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், நாடு முழுவதும் கொரோனா வழக்குகளில் கூர்மையான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழ்ந்தோர் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. இந்த நோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலம் மகாராஷ்டிரா. இங்கு கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்கிடையே, தமிழ்நாட்டிலும் கொரோனா வைரஸ் பரவத்தொடங்கியுள்ளது. நேற்றைய நிலவரப்படி மாநிலத்தில் 6 பேருக்கு வைரஸ் பரவியிருந்தது உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது ஸ்பெயினிலிருந்து தமிழகம் வந்திருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து வைரஸ் பாதிக்கப்பட்ட நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று தெரிவித்துள்ளார். 


 



 


இதையொட்டி தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.