காணும் பொங்கலையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் 9.5 மெட்ரிக் டன் குப்பைகள் குவிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உழைக்கும் மக்களால் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் நன்றி சொல்லும் ஒரு  கொண்டாட்ட நிகழ்ச்சி பொங்கல் எனப்படுகிறது. தை மாதம் முதல் நாள் கொண்டாடப்படும் இந்த விழா, தமிழர்களால் கொண்டாடப்படும் தனிப்பெரும் விழா ஆகும்.


தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் தமிழர் திருநாளாக இந்த விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 


உலகம் முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்படும் இந்த விழாவின் ஒருபகுதியாக உழவர்களுக்கு உதவும் மாடு, கண்றுகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. கிராமங்களில் வயல்வெளிகளில் கொண்டாடப்படும் இந்த விழா, சென்னை போன்ற நகரங்களில் பரந்த இடைவெளி இல்லா காரணத்தால், கடற்கரை போன்ற இடங்களில் பொதுமக்கள் குவிந்து கொண்டாடி வருகின்றனர்.


அந்த வகையில் இந்த ஆண்டும் சென்னை மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் பொதுமக்கள் கூடி காணும் பொங்கலை கொண்டாடினர். பொதுமக்கள் வரவால் கடற்கரை முழுவதும் குப்பைகளால் நிறைந்துள்ளது.


சென்னை மாநகராட்சி வசம் கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி சென்னை மெரினா கடற்கரையில் 9.5 மெட்ரிக் டன் குப்பைகளும் பெசன்ட் நகர் கடற்கரையில் இருந்து 4.5 மெட்ரிக் டன் குப்பைகளும் அகற்றப்பட்டதாக தெரிகிறது.