வேலூர்: நடந்து முடிந்த 17 ஆவது மக்களவை தேர்தலின் போது தமிழகத்தில் வேலூர் மக்களவைத் தேர்தலில், தி.மு.க. வேட்பாளருக்கு நெருக்கமானவர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில், கட்டுகட்டாக பணம் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து, வேலுார் தொகுதிக்கான தேர்தல் மட்டும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், ஆகஸ்ட் 5 ஆம் தேதி வேலூர் தொகுதிக்கு மக்களவை தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்கான வேட்புமனுத் தாக்கல் ஜூலை 11 ஆம் தேதி தொடங்கி, நேற்று (ஜூலை 18) நிறைவடைந்தது. இன்று வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை நடைபெற்று வருகிற நிலையில், அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகம், தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் ஆகியோரின் வேட்பு மனு மீதான பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டது. இதற்கு காரணம் இருவரும் பணப்பட்டுவாடா செய்ததாக புகார் கொடுக்கப்பட்டது. 


இறுதியாக வேலூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கதிர் ஆனந்த் மற்றும் அதிமுக சார்பில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன என தேர்தல் அதிகாரிகள் அறிவித்தனர்.