தமிழகத்தில் மாணவர்களுக்கு தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாணவர்கள் நலன் கருதி 12-ம் மற்றும் 10-ம் வகுப்பு தேர்வில் ரேங்க் பட்டியல் வெளியிடுவதை ரத்து செய்தது தமிழக அரசு. இதையடுத்து 11-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது.


இந்நிலையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நேற்று திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி அருகில் உள்ள நகராட்சி மைதானத்தில் கொண்டாடப்பட்டது.


அப்போது 11, 12 மாணவர்களை ஊக்குவித்தல் நிகழ்ச்சியை தம்பிதுரை மற்றும் செங்கோட்டையன் தொடங்கி வைத்தனர்.


அப்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேசியது:-


மாணவர்களுக்காக தமிழக அரசு பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பிளஸ்-1 மாணவர்களின் அச்சத்தை போக்க சிறப்பு திட்டம் ஒன்றை நாளை அரசு அறிவிக்க உள்ளது.


1 கோடியே 27 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் விபத்து காப்பீட்டு திட்டம் ஒரு வாரத்தில் அறிவிக்கப்பட உள்ளது.


அதேபோல் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்கள் வெளியிடப்பட உள்ளது. பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களுக்கு 54 ஆயிரம் கேள்விகள், விடைகள் அடங்கிய புத்தகத்திற்கான திட்டம் அறிவிக்கப்பட உள்ளது. 


பிளஸ்-1 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான மாதிரி வினா-விடையும் வெளியிடப்பட உள்ளது. மாணவர்கள் பொதுத்தேர்வை அச்சமின்றி எதிர்கொள்ள வேண்டும். மூச்சு நின்றால் மட்டும் மரணம் அல்ல. முயற்சி நின்றாலும் மரணம் தான். எனவே, மாணவர்கள் முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.


இவ்வாறு அவர் பேசினார்.