வாக்காளர் பட்டியலில் சிவகார்த்திகேயன் பெயர் விடுபட்டது எப்படி?
வாக்காளர் பட்டியலில் சிவகார்த்திகேயன் பெயர் எப்படி விடுபட்டது என்பது குறித்தும் அறிக்கை கேட்கப்பட்டுள்ளோம், தவறு இருக்கும் பட்சத்தில் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த 12 ஆம் தேதி தமிழகத்தில் 38 நாடாளுமன்ற தொகுதி மற்றும் 18 சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு ஆரம்பமாகி மாலை ஆறு மணி வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. காலை முதலே அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், சமூக சேவகர்கள் மற்றும் வயதானவர்கள் என அனைவரும் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். சில இடங்களில் வாக்கு இயந்திரங்கள் பழுது அடைந்ததால், வாக்காளர்கள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
அன்று நடிகர் சிவகார்த்திகேயன் மனைவியுடன் வாக்கு செலுத்துவதற்காக வளசரவாக்கத்தில் உள்ள செப்பர்ட்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குசாவடி எண் 303-ல் வந்தனர். ஆனால் அங்கு அவரது மனைவியின் பெயர் மட்டும் தான் வாக்காளர் பட்டியலில் இருந்தது. நடிகர் சிவகார்த்திகேயன் பெயர் இல்லை. இதனால் அவர் வாக்களிக்க முடியாத சூழ்நிலை ஏற்ப்பட்டது. அங்கு இருந்த தேர்தல் அதிகாரிகளுடன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
பின்னர் மதியம் மீண்டும் வாக்குசாவடிக்கு சென்ற அவருக்கு சிறப்பு சலுகை வழங்கி வாக்களிக்க அனுமதிக்கப்பட்டது. வாக்களித்த நடிகர் சிவகார்த்திகேயன், விரலில் மையுடன் இருக்கும் போட்டோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்ப்படுத்தியது. வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத ஒருவர் எப்படி வாக்களிக்க முடிந்தது. அவருக்கும் மட்டும் ஏன்? சிறப்பு அதிகாரம் வழங்கப்பட்டது என கேள்விகள் எழுப்பட்டனர்.
இதுக்குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் கேட்டபோது, வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத ஒருவர் வாக்களிக்க முடியாது. அவருக்கு வாக்களிக்கும் அனுமதி வழங்கியது தவறு. அதுக்குறித்து விளக்கம் கேட்டுள்ளோம். தவறு இருக்கும் பட்சத்தில் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும். வாக்காளர் பட்டியலில் சிவகார்த்திகேயன் பெயர் எப்படி விடுபட்டது என்பது குறித்தும் அறிக்கை அனுப்புமாறு கேட்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.
இந்த சம்பவத்தை பொருத்த வரை அதிகாரிகள் மீது தான் தவறு. வாக்களித்த வாக்காளர் மீது தவறு இல்லை. அதனால் நடிகர் சிவகார்த்திகேயன் மீது எந்தவித நடவடிக்கை எடுக்கமாட்டோம் எனவும் கூறினார்.