காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு வியாபாரிகள் மற்றும் நாடார் சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருவேற்காட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 1122 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பாட புத்தகங்களை வழங்கினார். பின்னர் அவர் அளித்த பேட்டியில் உத்திரபிரதேசத்திற்கும் திட்டம் கொடுக்கவில்லை அங்கும் அதிகமான எம்பிக்களை கொடுத்துள்ளார்கள் நான் அரசியல் பேச விரும்பவில்லை. மாநில முதல்வர் சென்றால் உரிய மரியாதை கொடுக்க வேண்டும் நிதி ஆயுக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேச அனுமதி மறுக்கப்பட்டதால் வெளியேறினார், பேச மறுக்கப்படும் என்பது முன்கூட்டியே அறிந்து தமிழக முதல்வர் கூட்டத்தை புறக்கணித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | கோவையில் கட்டி தழுவி வாழ்த்துக்களை தெரிவித்து கொண்ட அண்ணாமலை - சீமான்!


 


இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட மாநிலத்திற்கு ஏதாவது கொடுத்துள்ளார்களா என்றால் ஏதுமில்லை. செய்யூரில் 4000 மெகாவாட் மின் திட்டத்திற்கு மறைந்த முதல்வர் கலைஞர் 4000 ஏக்கர் நிலம் எடுத்து வைத்துள்ளார். 2015 ஆம் ஆண்டு டெண்டர் ரத்து செய்யப்பட்டது, இதுவரை டெண்டர் வைக்கப்படவில்லை. வைத்திருந்தால் 2000 மெகாவாட் தமிழகத்திற்கு கிடைத்திருக்கும், மின் கட்டணம் உயர்த்தியிருக்க வேண்டியது இருக்காது அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தமிழக அமைச்சரவையில் மாற்றம் வருவது குறித்து முதல்வரிடம் கேட்டு கொள்ளவும். கொலை குற்றங்கள் நடந்து கொண்டுதான் இருக்கும் அந்த குற்றத்திற்கு நடவடிக்கை எடுக்கிறார்களா என்று தான் பார்க்க வேண்டும். தமிழ்நாட்டில் எந்த குற்றங்கள் நடந்தாலும் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் எடுக்காமல் இருந்தால் தான் என் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேட்க வேண்டும் என பேசினார். இந்த நிகழ்ச்சியில் ஆவடி சட்டமன்ற உறுப்பினர் நாசர், எர்ணாவூர் நாராயணன், வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சந்தி சிரிக்கிறது - நாம் தமிழர் கட்சி காளியம்மாள்


தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சந்தி சிரிக்கிறது, இன்ஸ்டாகிராம் தளத்தில் பதிவு செய்ததற்காக கரூரில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என நாம் தமிழர் கட்சி காளியம்மாள் கரூரில் பேசியுள்ளார். கரூர் மாவட்டம் தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வு மற்றும் சட்டம், ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் கரூர், உழவர் சந்தை அருகில் கண்டன பொதுக்கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்ட செயலாளர் நன்மாறன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கட்சியின் மாநில மகளிர் பாசறை செயலாளர் காளியம்மாள் மற்றும் மாநில இளைஞர் பாசறை செயலாளர் இடும்பாவனம் கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். 


அப்போது உரையாற்றிய காளியம்மாள் தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வு அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பாக 200 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு மின் கட்டணத்தை குறைத்து விட்டு வீடுகளுக்கு அதிக அளவு மின்கட்டணம் உயர்த்தப்படுகிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. இன்று ஒரு நாள் மட்டும் பெண் குழந்தைகளுக்கு எதிராக நூற்றுக்கணக்கான பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன குறிப்பாக கரூரில் இன்ஸ்டாகிராம் தளத்தில் பதிவு செய்ததற்காக இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று பேசினார்.


மேலும் படிக்க | காங்கிரஸ் கருத்து உரிமைகளில் நாம் தலையிடுவதில்லை - அமைச்சர் ஐ பெரியசாமி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ