மதுரை மேற்கு மாவட்ட பட்டியல் அணி தலைவர் முத்துமாரி தலைமையில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் 9வது ஆண்டு ஏ.பி.ஜே.அப்துல் கலாமுக்கு நினைவஞ்சலி செலுத்தும் வகையில் பெருங்குடி சாலையில் அவரது திருவுருவப்படம் பாஜக சார்பாக வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது இதில் பாஜக சிறுபான்மை தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் ராவுத்தர் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் மதுரை மேற்கு மாவட்ட பாஜகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து பாஜக சிறுபான்மை தேசியச்செயலாளர் இப்ராஹிம் ராவுத்தர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், மத்திய அரசு பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் பெயர் கூட இடம் பெறவில்லை என திமுகவினர் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, 15 மாநிலங்களின் மத்திய அரசின் பட்ஜெட்டில் குறிப்பிடப்படவில்லை, பாஜக ஆளுகின்ற மத்திய பிரதேசத்தை பட்சத்தில் குறிப்பிடவில்லை, காங்கிரசால் குறிப்பிடப்படும் மாநிலம் மணிப்பூரும் பட்ஜெட்டில் குறிப்பிடப்படவில்லை, அந்த மாநிலங்களில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. ஒரு லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு தமிழகத்துக்கு நிதியாக தந்திருக்கிறது, பாதுகாப்பை பலப்படுத்துகிற ஒரு தொழில் முனையத்தை தமிழகத்துக்கு, மத்திய பிரதேசத்திற்கும் மத்திய அரசு தந்திருக்கிறது. 11 மருத்துவக் கல்லூரிகளை ஒரே நேரத்தில் தொடங்கியது தமிழகத்தில் மட்டும் தான், மொத்தம் 13 மருத்துவ கல்லூரிகள் தந்து இருக்கிறது.
மேலும் படிக்க | நிதிஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கக்கூடாது - தமிழிசை சவுந்திரராஜன் வலியுறுத்தல்
6000 கோடி ரூபாய் நிதியை தமிழகத்தின் ரயில்வே மேம்பாட்டு பணிக்காக மத்திய அரசு தற்போது கொடுத்து இருக்கிறது. இது போன்ற எண்ணில் அடங்கா விஷயங்களை தமிழகத்துக்கு தந்தாலும் அரசியலுக்காவும் மத்திய அரசை குறை சொல்ல வேண்டும் என்பதற்காக தமிழகத்தின் முதல்வர் ஸ்டாலின் அவர்களும் அவருடைய கூட்டணி கட்சிகளும் தமிழகத்தை கூறு போட்டு விற்பனை செய்ய துணிந்து கொண்டிருக்கிறார் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி கயவர்களும் இவர்கள் செய்யக்கூடிய பொய் பிரச்சாரங்களை நாங்கள் வழுமையாக எதிர்க்கிறோம் பாராளுமன்றத்தில் சரியான முறையில் பதில் அளித்துக் கொண்டிருக்கிறோம். திமுகவின் முகமூடியை கிழித்தெறிவோம்.
காங்கிரஸ் கட்சியில் இ.வி.கே.எஸ் இளங்கோவன் மற்றும் கார்த்திக் சிதம்பரம் கருத்து மோதல் குறித்த கேள்விக்கு, காங்கிரஸ்காரர்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்வதும் மாமா மச்சான் பிரச்சனை போன்றது. உட்கட்சி பூசலுக்கு பெயர் போனது காங்கிரஸ், குறிப்பாக தமிழக காங்கிரஸில் மொத்தமாக பத்து தலைவர்கள் இருக்கிறார்கள் என்றால் பத்து அணிகளாக இருப்பார்கள் இது அவர்களுடன் உட்கட்சி பூசல் அது அப்படியே இருக்கட்டும் அதுதான் எங்களின் வளர்ச்சிக்கு நல்லது. தமிழகத்தின் மின் கட்டண உயர்வுக்கு காரணம் மத்திய அரசும் அப்போது ஆண்ட அதிமுக உதய் திட்டத்தில் கையொப்பமிட்டது தான் காரணம் என்று திமுக அமைச்சர்கள் பேசியது குறித்த கேள்விக்கு, மு.க.ஸ்டாலின் மூன்றை ஆண்டுகளாக கோமாவில் இருந்தாரா அல்லது தூங்கிக் கொண்டிருந்தாரா? சொன்ன வாக்குறுதியை மறந்து விட்டு இந்த மக்களை ஏமாற்ற துடிக்கிறாரா?
மக்கள் எதைச் சொன்னாலும் ஏமாந்து விடுவார்கள், பணத்தால் விலைக்கு வாங்கலாம் என்று அவர் நினைத்தால் 2026-ல் சட்டமன்றத் தேர்தலில் பாஜக பதிலடி கொடுக்கும். அண்ணாமலை தலைமையில் தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சியாக அமையும். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை லண்டனுக்கு படிக்க செல்வதாகவும் பாஜக மாநில தலைவர் புதியதாக பொறுப்பேற்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது குறித்த கேள்விக்கு, அரசியல் படிப்பிற்காக இந்தியாவில் 12 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். அதில் ஒருவர் அண்ணாமலை. அரசியல் சார்ந்த படிப்பில் பாஜக மாநில தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்பது எங்களுக்கு மிகவும் பெருமை மிகு விஷயம்,அதுவரை பாஜக முறையான குழுவை அமைத்து கட்சியின் பணியின் தொடங்குவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் வழக்கறிஞர்கள் சம்பந்தப்பட்டு உள்ளது குறித்த கேள்விக்கு, சட்டம் படித்த எல்லோரையும் குற்றம் சொல்ல முடியாது, காவல்துறையிலும் கள்ளச்சாரத்தை பெற்ற போது கண்டு கொள்ளாமல் சில கருப்பு ஆடுகள் இருந்தார்கள், இந்த கருப்பு ஆடுகள் களையெடுக்கப்பட வேண்டும். குற்றம் செய்யப்பட்ட சட்டம் படித்த கருப்பு ஆடுகள் மீது பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களுடைய பார் கவுன்சில் அங்கீகாரத்தை நீக்கப்பட வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைத்திருக்கிறோம். இந்த கொடுங்கோலில் ஈடுபட்டவருக்கு சட்டம் முன்னால் நிறுத்தி நீதி பெற்றுத் தர வேண்டும். வழக்கறிஞர்கள் என்ற போர்வையில் இருக்கும் குற்றவாளிகளை காப்பாற்றி விடக்கூடாது என்பது தான் எங்களின் கோரிக்கை எப்போதெல்லாம் இந்த ஆட்சி எப்போதெல்லாம் தவறு செய்யுமோ அப்போதெல்லாம் நாங்கள் நெஞ்சு உறுதியுடன் கேட்டு களம் இறங்குவோம் என்று தெரிவித்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ