தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஓட்டு பதிவு காலை தொடங்கியது. வாக்குப் பதிவு துவங்கிய முதலே பெரும்பாலான வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைச் போட்டனர். குறிப்பாக நடிகர் மற்றும் நடிகைகள் தங்கள் வாக்குகளை காலையிலே செலுத்தினர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது வாக்கு பதிவை சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் காலை 7 மணி அளவில் செலுத்திவிட்டார். அதேபோல தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச் சாவடியில் கமல்ஹாஸன் தனது வாக்கை பதிவு செய்தார். நடிகர் அஜீத் மற்றும் ஷாலினி இருவரும் காலையிலே திருவான்மியூரில் உள்ள வாக்குச் சாவடியில் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். வளர்ந்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன் வளசரவாக்கத்தில் உள்ள ஏஞ்சல் பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார். நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் நடிகர் ஜீவா, கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் தங்களின் வாக்குகளை காலையிலேயே செலுத்திவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


ஆனால் சூர்யா அமெரிக்காவில் இருப்பதால் அவரால் வாக்களிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதற்காக அவர் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார்.