நடிகர் எம்.எல்.ஏ. கருணாசை விசாரிக்ககோரிய மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்
நடிகர் எம்.எல்.ஏ. கருணாசை விசாரிக்ககோரிய மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்.
கடந்த 16-ந் தேதி சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் மற்றும் காவல்துறையினரை அவதூறாக பேசிய வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதையடுத்து நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ. மீது நுங்கம்பாக்கம் போலீசார் 7 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.
இந்தநிலையில் நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ. தனக்கு ஜாமீன் வேண்டும் எனகோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதேவேளையில், போலீசாரும் நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ.வை ஏழு நாள் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் எனக்கோரி மனு தாக்கல் செய்தனர்.
இன்று இந்த மனு மீதான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்பொழுது நீதிபதிகள், நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ.வை ஏழு நாள் காவலில் எடுத்து விசாரிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தனர்.