சிம்பு-விற்கு எப்போது திருமணம் என்ற கேள்வியை எதிர்கொள்ளும்படியாக தன்னை இறைவன் வைத்துள்ளதாக அவரது தந்தை டி.ராஜேந்தர் வருத்தம் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இயக்குநர் டி.ராஜேந்தரின் இரண்டாவது மகனும், நடிகர் சிம்புவின் தம்பியுமான குறளரசன், தான் காதலித்த நபீலா அஹமதுவை கடந்த 26-ஆம் தேதி திருமணம் செய்தார்.


திருமண நிகழ்ச்சியை தொடர்ந்து சென்னை தியாகராய நகரில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த டி.ராஜேந்தர், “என்னுடைய இளைய மகன் குறளரசன் திருமணம் நடந்து முடிந்துள்ளது. நான் என் மகனுடைய திருமணத்திற்கு பலருக்கு அழைப்பு விடுத்திருந்தேன். கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு நெரிசல் ஏற்பட்டது. அதனால் பல பத்திரிகையாளர்களை என்னால் வரவேற்க முடியாமல் போனது.


சிம்பு-வின் வளர்ச்சியிலும் சரி, என்னுடைய வளர்ச்சியிலும் சரி ஊடகத்துறையினர் பங்கு அதிகம். என் மகன் திருமணத்திற்கு ஓ.பி.எஸ், மு.க.ஸ்டாலின், உதயநிதி , திருமாவளவன் உள்ளிட்ட பல அரசியல்வாதிகள், நடிகர்கள் என வந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பலரை என்னால் அழைக்க முடியாமல் போனதற்கு வருந்துகிறேன்.


சினிமாவில் மட்டுமல்ல நிஜ வாழ்விலும் மதங்களுக்கு அப்பாற்பட்ட காதலை ஏற்றுக்கொள்பவன் இந்த டி.ராஜேந்திர். அதனால்தான் குறளரசன் விரும்பியபடி திருமணம் நடைபெற்றது. பிள்ளைகள் ஆசைப்பட்டதுபோல் திருமணம் நடத்தி வைக்கும் தாய் தந்தையாக எல்லாரும் இருக்க வேண்டும்.” என தெரிவித்தார்.


தொடர்ந்து பேசிய அவர் சிம்பு-விற்கு எப்போது திருமணம் என்ற கேள்வியை எதிர்கொள்ளும்படியாகவே என்னை இறைவன் வைத்துள்ளான் என்பதை நினைத்து வருத்தமடைகிறேன் என கூறி கண்கலங்கினார்.