முடிவெடுத்துவிட்டு கருத்து கேட்பது அரசியல் சாதுர்யம்: நடிகர் கமல் டிவீட்
நடிகர் கமல்ஹாசன் பஸ் கட்டண உயர்வுக்கு எதிராக தனது டிவிட்டரில் பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார். அதில்,
நடிகர் கமல்ஹாசன் பஸ் கட்டண உயர்வுக்கு எதிராக தனது டிவிட்டரில் பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார். அதில்,
" பஸ் கட்டண உயர்வை ஏழைகளின் அரசாங்கமாக இருந்தால் தடுக்க ஆவனவெல்லாம் செய்திருக்கும். முடிவெடுத்துவிட்டு கருத்து கேட்பது அரசியல் சாதுர்யம். முன்பே கேட்டிருந்தால் நல்ல நிவாரணம் சொல்லும் வல்லுனர்கள் அரசுப் பணியிலேயே உள்ளனர். அரசாள்பவர் கேட்டால்தானே! "
தற்போது சில காலமாக ஊழலுக்கு எதிராக டிவீட் பதிவிட்டு வரும் கமல்ஹாசன் பிப்ரவரி 21 முதல் தனது அரசியல் பயணத்தை தொடங்க உள்ளார். இந்த நிலையில் பஸ் கட்டண உயர்வுக்கு எதிராக நடிகர் கமல்ஹாசன் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.