இந்தியாவின் தலைநகர் தில்லியில் விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றது. வேளான் மசோதாக்கள் உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் போராட்டம் செய்து வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தில்லியில் குளிர்காலம் துவங்கிவிட்ட நிலையில், வெட்ட வெளியில் நாட்டின் பல மாநிலங்களிலிருந்து வந்துள்ள விவசாயிகள் குளிரில் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.


இதற்கிடையில் பல தரப்பிலிருந்தும் விவசாயிகளுக்கு ஆதரவு பெருகி வருகிறது. பொது மக்கள் முதல் பிரபலங்கள் வரை விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.


தில்லியில் (Delhi) போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவி சாய்த்து அவற்றை பரிசீலிக்க வெண்டும் என தமிழ் திரைப்பட நடிகர் கார்த்தி (Actor Karthi) கூறியுள்ளார். இது குறித்து தனது கருத்துக்களை வியாழக்கிழமை வெளிப்படுத்திய கார்த்தி, புதிய வேளான் சட்டங்களால் தங்களுக்கு பாதிப்பு அதிகமாக இருக்கும் என விவசாயிகளுக்கு அச்சம் உள்ளது. மத்திய அரசு அந்த அச்சதைப் போக்கி, விவசாயிகள் சுதந்திரமாக எந்த கட்டுப்பாடும் இல்லாமல் தொழில் செய்வதை உறுதிசெய்ய வேண்டும் என கூறியுள்ளார்.


இயற்கை சீற்றம், தண்ணீர் பிரச்சனை போன்ற பல பல தடைகள் ஏற்கனவே விவசாயிகளின் முன்னால் உள்ளன. சமீபத்தில் இயற்றப்பட்டுள்ள வேளான் மசோதாக்களால் (Farm Bill) அவர்களது பிரச்சனைகள் இன்னும் அதிகரிப்பதாக அவர்கள் கருதுகிறார்கள்.


ஆகையால், விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி, அனைவரது எதிர்பார்ப்பையும் மத்திய அரசு பூர்த்தி செய்ய வேண்டும் என கார்த்தி கேட்டுக்கொண்டுள்ளார்.



நாட்டின் உயிர் நாடியாக இருக்கும் விவசாயிகளின் (Farmers) உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதும், அவர்களது உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதும் மிக முக்கியமான விஷயங்களாகும்.


மத்திய அரசாங்கமும் (Central Government) இது குறித்து பல முயற்சிகளை எடுத்து வருகிறது. விவசாய பிரதிநிதிகளுடன் அரசாங்கத்தின் பல உயர் அதிகாரிகள் பல கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றனர்.


ALSO READ: Farmers Protest: விவசாயிகள் போராட்டம் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும்


விவசாயிகளும் தங்கள் போராட்டங்களில் மற்ற தேச விரோதிகள் குளிர் காயாதவாறு கவனமாக இருக்க வேண்டும். விவசாயிகளின் போர்வையில் சில மக்கள் விரோத சக்திகள் வன்முறையை தூண்ட முயற்சிப்பதாகவும் தகவல்கள் வருவதால், உண்மையான போராட்டமும், நியாயமான கருத்துகளும் வன்முறையின் கீழ் மறைக்கப்படுவதற்கும் மிதிக்கப்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.


சுமுகமான முறையில் பேச்சுவார்த்தை மூலம் இந்த பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்ப்பு கிடைக்க வேண்டும் என்பதே அரசாங்கம், விவசாயிகள் என இரு தரப்பினரின் ஒருமித்த எண்ணம் என்பதில் சந்தேகமில்லை. 


ALSO READ: விவசாயிகளின் போராட்டத்தால் மக்களுக்கு சிரமம்; Haryana-Punjab உயர் நீதிமன்றத்தில் வழக்கு


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR