நாட்டின் அமைதிக்காக அனைத்தையும் செய்யத் தயார்: நடிகர் ரஜினிகாந்த் உறுதி
டெல்லி வன்முறை தொடர்பாக மத்திய அரசை கடுமையாகத் தாக்கிய சில நாட்களுக்குப் பிறகு, நாட்டின் அமைதிக்காக அனைத்தையும் செய்யத் தயார் என நடிகர் ரஜினிகாந்த் தெரவித்துள்ளார்.
சென்னை: நாட்டில் அமைதியை நிலைநாட்ட எந்தவொரு காரியத்தையும் செய்யத் தயாராக இருப்பதாக நடிகரும் ஆர்வமுள்ள அரசியல்வாதியுமான ரஜினிகாந்த் (Rajinikanth) தெரிவித்துள்ளார். ஒரு முஸ்லீம் அமைப்பைச் சேர்ந்த ஒரு சில தலைவர்களை தனது இல்லத்தில் சந்தித்த பின்னர் அவர் ட்விட்டரில் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.
அவர் தனது டிவிட்டரில், "நாட்டில் அமைதியை நிலைநாட்ட அனைத்தும் செய்யத் தயாராக தயாராக இருக்கிறேன். ஒரு நாட்டின் பிரதான நோக்கம் அன்பு, ஒற்றுமை மற்றும் அமைதி ஆகியவையாக தான் இருக்க வேண்டும் என்ற அவர்களின் (முஸ்லீம் தலைவர்கள்) கருத்துக்கு நானும் உடன்படுகிறேன்" என்று 69 வயதான நடிகர் ரஜினிகாந்த் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த், ‘தமிழ்நாடு ஜமாஅதுல் உமா சபாய்’ (TNJUS)) உறுப்பினர்களுக்கு தேவையானதைச் செய்வதாக உறுதியளித்தார் என்று அமைப்பின் தலைவர் கே.எம்.பகாவி (KM Baqavi) தெரிவித்தார். குடியுரிமை (திருத்த) சட்டம் (CAA), தேசிய மக்கள் தொகை பதிவு (NPR) மற்றும் தேசிய குடிமக்களின் பதிவு (NRC) காரணமாக முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து டி.என்.ஜு.எஸ் உறுப்பினர்கள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ரஜினிகாந்தை சந்தித்து அவரிடம் விளக்கமளித்தனர்.
சில நாட்களுக்கு முன்பு CAA மூலம் ஒரு முஸ்லீம் பாதிக்கப்பட்டாலும் குரல் எழுப்பும் முதல் நபராக நான் தான் இருப்பேன் என்று நடிகர் ரஜினிகாந்த் முன்பு கூறியிருந்தார் குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரம், நடிகர் ரஜினிகாந்த் டெல்லியில் நடந்த வன்முறைகள் குறித்து மத்திய அரசை கடுமையாக சாடினார், கலவரங்களை ஒரு "இரும்பு கரம்" கொண்டு கையாண்டிருக்க வேண்டும் என்று கூறினார். பாஜக தலைமையிலான மத்திய அரசு வன்முறையை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், பதவியில் இருப்பவர்களை "ராஜினாமா செய்யுங்கள்" என்று சாடினார்.
"இது ஒரு உளவுத்துறை தோல்வி. உள்துறை அமைச்சகமும் தோல்வியடைந்து விட்டது. ஆர்ப்பாட்டங்கள் அமைதியாக நடக்கலாம். ஆனால் வன்முறை முறையில் அல்ல. வன்முறை வெடித்தால், அதை இரும்புக் கரம் கொண்டு கட்டுப்படுத்தி இருக்க வேண்டும்: என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியிருந்தார்.
அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி (AAP) அரசாங்கத்தை அவர் விட்டுவைக்கவில்லை. மேலும் தலைநகரில் நிலைமை மோசமடைய டெல்லி ஆளும் அரசும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறினார்.