சென்னை: அமித்ஷாவும் மோடியும், கிருஷ்ணன் அர்ஜூனாவை போன்றவர்கள். அதில் யார் கிருஷ்ணன் யார் அர்ஜூனன் என்பது அவர்களுக்கு தான் தெரியும் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அவர்களின் பணி குறித்த ஆவணப் புத்தகம் ஒன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று வெளியிடப்படுகிறது.  இந்த புத்தகத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிடுகிறார்.


இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் மத்திய அமைச்சர்கள், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.


அப்பொழுது நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது, துணை ஜனாதிபதி வெங்கைய்ய நாயுடு மிகப் பெரிய ஆன்மிகவாதி. அவர் தவறுதலாக அரசியலுக்கு வந்து விட்டார். மக்கள் மீது மிகவும் அக்கறை கொண்டவர் வெங்கைய்ய நாயுடு. 45 ஆண்டுகளுக்கு பிறகும் கூட என்னை நினைவு வைத்திருப்பவர் என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பற்றி பேசினார்.


அதேவேளையில் காஷ்மீர் விவகாரம் பற்றி பேசிய ரஜினிகாந்த், அமித்ஷாவும் மோடியும், கிருஷ்ணன் அர்ஜூனாவை போன்றவர்கள். அதில் யார் கிருஷ்ணன் யார் அர்ஜூனன் என்பது அவர்களுக்கு தான் தெரியும். காஷ்மீரை இரண்டாக பிரிக்க எடுக்கப்பட்ட விவகாரம் சிறப்பானது. காஷ்மீர் விவகாரத்திற்காக அமித்ஷாவுக்கு வாழ்த்துக்கள் எனக் கூறினார்.