செக் மோசடி! சரத்குமாருக்கு தண்டனை நிறுத்திவைப்பு
செக் மோசடி வழக்கில் சரத்குமார் மற்றும் அவர் மனைவி ராதிகா ஆகியோருக்கு தலா ஓராண்டு சிறை தண்டனை திடீர் நிறுத்திவைப்பு
செக் மோசடி வழக்கில் சரத்குமார் மற்றும் அவர் மனைவி ராதிகா ஆகியோருக்கு தலா ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள எம்பி எம்எல்ஏக்கள் வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை இன்று வழங்கியது. ஆனால் சரத்குமாருக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனையை சென்னை சிறப்பு நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
நடிகை ராதிகா சரத்குமார் (Radhika) மற்றும் சரத்குமார் (Sarathkumar) பங்குதாரராக இருக்கும் மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் கடந்த 2014ம் ஆண்டு விக்ரம் பிரபு மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோரை வைத்து ஒரு படம் தயாரிக்க திட்டமிட்டு இருந்தது. இதற்காக ஒன்றரை கோடி ரூபாயை ரேடியன்ஸ் நிறுவனத்திடம் கடனாக வாங்கினர். 2015ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பணத்தை திருப்பி தந்து விடுவதாக இவர்கள் கூறியிருந்தனர். ஆனால் பணத்தை மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் திருப்பித் தரவில்லை.
அதே நேரத்தில் இந்த பணத்தை வைத்து பாம்பு சட்டை என்ற வேறு ஒரு படம் மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் தயாரித்தது. ரேடியன்ஸ் நிறுவனத்திற்கு மேஜிக் பிரேம்ஸ் வழங்கிய செக் பவுன்ஸ் ஆகிய நிலையில் நீதிமன்றத்தில் ரேடியன்ஸ் நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்தால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என்று கூட உத்தரவு வழங்கியது நீதிமன்றம்.
ALSO READ | சீரியலில் இருந்து நடிகை ராதிகா விலகிய காரணம் என்ன?
மொத்தம் 7 வழக்குகளில் சரத்குமார் எதிர் மனுதாரராக சேர்க்கப்பட்டார். 2 வழக்குகளில் ராதிகா, ஸ்டீபன் ஆகியோர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டனர். வட்டி அதிகமாக கேட்டதால் பணத்தை உடனே திரும்ப செலுத்த முடியவில்லை என்று மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் வாதிடப்பட்டது. ஆனால் செக் மோசடி செய்யப்பட்டுள்ளது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டதாக மனுதாரர் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் ராதிகா, ஸ்டீபன் மற்றும் சரத்குமார் மூன்று பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தது நீதிமன்றம். 7 வழக்குகளில் எதிர் மனுதாரராக இருக்கும் சரத்குமாருக்கு தலா ஒரு வருடம், ராதிகாவுக்கும், ஸ்டீபனுக்கும் 2 வழக்குகளில் தலா ஒரு வருடம் சிறை என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது இந்த வழக்கில் நடிகர் சரத்குமாருக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. சரத்குமாருக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனையை சென்னை சிறப்பு நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. மேலும் செக் மோசடி வழக்கில் நடிகை ராதிகா ஆஜராகாத நிலையில் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR