நடிகர் செந்தில் மற்றும் டி.டி.வி.தினகரன் கைது செய்ய இடைக்கால தடை
நடிகர் செந்தில் மற்றும் டி.டி.வி.தினகரன் மீதான வழக்குக்கு இடைக்கால தடை விதித்தது மதுரை ஐகோர்ட்.
செய்தியாளர்களுக்கு நடிகர் செந்தில் பேட்டி அளித்த போது தன்னை தகாத வார்த்தையில் கடுமையாக விமர்சித்து பேசியதாகவும், டி.டி.வி.தினகரனின் தூண்டுதலின் பேரில் நடிகர் செந்தில் தன்னை அவதூறாகப் பேசியதாக எடப்பாடி பழனிசாமி அணியில் இருக்கும் திருச்சி தொகுதி எம்.பி. குமார் காவல் நிலையத்தில் புகார் செய்தார். எனவே திருச்சி போலீசார் நடிகர் செந்தில் மற்றும் டி.டி.வி.தினகரன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திருச்சி தொகுதி எம்.பி. குமாரின் வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகர் செந்தில் மதுரை கிளை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இருவரையும் வரும் அக்டோபர் 4-ம் தேதி வரை கைது செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.