சென்னை: சென்னை பட்டினம்பாக்கம் கடற்கரை சாலையில் அமைந்துள்ள டுமீல் குப்பம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி 500 பேருக்கு ப்ரெட் மற்றும் பால் பாக்கெட்டுகளை, நடிகையும் பாஜக செயற்குழு உறுப்பினருமான குஷ்பு சுந்தர் வழங்கினார். அப்பொழுது செய்தியாளரிடம் பேசும் போது, சொந்த தொகுதியை பார்த்துக் கொள்ள முடியாதவர், தமிழகத்தை எப்படி பார்த்துக் கொள்வார் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் (TN CM M.K. Stalin) குறித்து கேள்வி எழுப்பினார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று அவரிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த குஷ்பு (BJP Cadre Kushboo) பேசியது, "தமிழக முதல்வரை தவிர வேறு யாரும் இந்த கனமழை பேரிடர் காலத்தில் ஒழுங்காக வேலை செய்யவில்லையா? கொளத்தூர் பகுதியில் பிரச்னை இல்லையா? இங்கு தண்ணீர் தேங்கி நிற்க வில்லையா? அதிமுக காலத்தில் ஏற்பட்ட சூழல், திமுக ஆட்சியில் ஏற்படவில்லையா? என அடுக்கடுக்காய் கேள்விகளை எழுப்பினார். திமுக தான் ஊழல் கட்சி எனவும் கூறினார். 


அதேபோல நடிகர் சூர்யா தொடர்பான சர்ச்சை குறித்து கேட்டபோது, அது குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனவும், படத்தை பார்த்து விட்டு தெரிவிக்கிறேன் எனவும் பதில் அளித்தார். மேலும் நடிகர் சூர்யாவுக்கு சமூக வலைத்தளம் மூலம் ஆதரவு தெரிவித்ததால் மட்டும் தான் அவருடன் நாங்கள் நிற்கிறோம் என அர்த்தமா? எனக் கூறினார். 


ALSO READ |  நிஜமான செங்கனிக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி-சூர்யா!


நடிகர் சூர்யாவை எட்டி உதைத்தால் ஒரு லட்சம் தரப்படும் என பாமக நிர்வாகி அறிவித்ததை குறித்து கேட்டபோது, அப்படி பாமக சொல்கிறது என்றால், அது பாமகவின் கருத்து. இதுக்குறித்து பாமகவிடம் தான் கேட்க வேண்டும் என்றார். தன்னை எப்படி பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என்று சூர்யா சாருக்கு நன்றாகவேத் தெரியும் என பதில் அளித்தார். சூர்யா (Actor Surya) அவர்கள் தனது NGO மூலம் நிறைய உதவிகளை செய்துள்ளார். நிறைய நல்ல விசியங்களை செய்து வருகிறார் என்பது நம் அனைவருக்கும் தெரியும் எனவும் கூறினார்.


செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்துக் கொண்டிருக்கும் போதே அங்கு உதவிபெற வந்த பெண்மணி ஒருவர், "5 கிலோ அரிசி கொடுத்திருந்தால் கூட பிரயோஜனமாக இருந்திருக்கும், தற்போது நீங்கள் கொடுத்திருக்கும் ப்ரெட் மற்றும் பால் ஒருவேளைக்குக்கூட பத்தாது’" என வேதனையோடு தெரிவித்தார்.  அதற்கு உடனடியாக குஷ்பு, "கண்டிப்பா கொடுப்போம். உறுதியாக செய்கிறோம்" என்று அவரிடம் கூறினார். மேலும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒவ்வொரு இடத்திற்கும் போகும் போது நிறைய நல்ல விசியங்களை செய்து வருகிறார் எனவும் கூறினார்.


ALSO READ |  சூர்யாவை விமர்சித்த அன்புமணிக்குத் தயாரிப்பாளர்கள் சங்கம் கண்டனம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR