கார் மீது லாரி மோதி விபத்து: முருகன் அருளால் தப்பிய குஷ்பு….

சமீபத்தில் பாஜக-வில் சேர்ந்த குஷ்புவின் கார் மதுராந்தகம் அருகே விபத்துக்குள்ளாகியது. விபத்து குறித்து கூறியுள்ள குஷ்பு, முருகன் அருளால் தான் தப்பியதாகக் கூறியுள்ளார்.  

Written by - ZEE Bureau | Last Updated : Nov 18, 2020, 10:31 AM IST
  • குஷ்பு சுந்தர் சென்ற கார் விபத்துக்குள்ளானது.
  • முருகன் அருளால் உயிர் தப்பினேன் - குஷ்பு.
  • சமீபத்தில் பாஜக-வில் இணைந்தார் குஷ்பு.
கார் மீது லாரி மோதி விபத்து: முருகன் அருளால் தப்பிய குஷ்பு….

பிரபல தமிழ் சினிமா நட்சத்திரமும் தமிழக அரசியல் தலைவருமான குஷ்பு சுந்தர் சென்ற கார் விபத்துக்குள்ளானது என செய்திகள் வந்துள்ளன.

சமீபத்தில் பாஜக-வில் சேர்ந்த குஷ்புவின் கார் மதுராந்தகம் அருகே விபத்துக்குள்ளாகியது. விபத்து குறித்து கூறியுள்ள குஷ்பு, முருகன் அருளால் தான் தப்பியதாகக் கூறியுள்ளார்.

கட்சியில் வலுவான ஒரு பங்கை அளித்து வரும் குஷ்பு (Khushbu), பாஜக-வில் இணைந்த சில நாட்களுக்குள்ளேயே தமிழக பாஜக-வின் ஒரு முக்கியப் புள்ளியாக உருவெடுத்து வருகிறார்.

கட்சியின் பல பிரச்சாரங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் பங்குகொண்டு வரும் குஷ்பு, வேல் யாத்திரையில் பங்கேற்க சென்னையிலிருந்து (Chennai) கடலூருக்கு இன்று காரில் கிளம்பினார்.

ALSO READ: ரூ.10.10 கோடி அபராதம் செலுத்தினார் சசிகலா...விரைவில் விடுதலையா?

வேல் யாத்திரையில் தான் பங்குகொள்ள வேண்டும் என்பது முருகக்கடவுளின் கட்டளை என்றும் அதை கண்டிப்பாக நிறைவேற்றுவேன் என்றும் குஷ்பு கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.   

விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ALSO READ: தமிழகத்தில் கொரோனாவை வென்று வீழ்த்திய முதல் மாவட்டமானது பெரம்பலூர்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News