புதிய கல்விக்கொள்கை குறித்து நடிகர் சூர்யா தெரிவித்த கருத்து, வன்முறையை தூண்டும் விதமாக உள்ளதாக ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அகரம் அறக்கட்டளை சார்பில் சென்னையில் கடந்த வாரம் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய சூர்யா “ புதிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கை குறித்து பெரும்பாலான மாணவர்கள், பெற்றோர்கள் பேசாதது வருத்தமளிக்கிறது. அதேபோல் குறைவான ஆசிரியர்கள், மாணவர்கள் கொண்ட பள்ளிகளை மூடும் முடிவும் சரியல்ல. பள்ளிகளின் தரத்தை உயர்த்தமால் பள்ளிகளை மூடினால், கிராமப்புற மாணவர்கள் எங்கு செல்வார்கள். அனைவருக்கும் சமமான கல்வியை அளிக்காமல், நுழைவுத் தேர்வு நடத்தப்படுவது ஏன்..? “ என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.


இந்நிலையில் சூர்யாவின் கருத்துக்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய ஹெச்.ராஜா, புதிய கல்விக்கொள்கையில், தாய்மொழி, ஆங்கிலம் மற்றும் விருப்ப மொழி, என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், அவ்வாறு இருக்கும்பட்சத்தில் எவ்வாறு இந்தி மொழி திணிக்கப்படுவதாக அமையும், என கேள்வி எழுப்பினார்.


மேலும், இந்தி படிக்க கூடாது என கூறும் திமுகவினர், வீடுகளின் முன்பு பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும், ஹெச்.ராஜா தெரிவித்தார்.