சென்னை: நாட்டின் தென் மாநிலங்களான தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளா சட்டசபைக்கு இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு (TN Assembly Polls 2021) தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் நடிகர், நடிகை உட்பட பல பிரபலங்கள் தங்கள் ஓட்டை வாக்குச்சாவடியில் செலுத்தி வருகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வகையில், தமிழ் சினிமாவின் முக்கிய முன்னணி நடிகர்களில் ஒருவரான தளபதி விஜய் (Actor Vijay), தனது வாக்கைப்பதிவு செய்ய சைக்கிளில் வந்தார். இதுக்குறித்த வீடியோ சமூக ஊடங்களில் வைரலாகி வருகிறது. நடிகர்விஜய் நீலாங்கரையில் வாக்களிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் சைக்கிளில் வந்து வாக்களித்தற்கு பெட்ரோல் டீசல் விலை உயர்வு தான் காரணம் எனவும், மத்திய, மாநில அரசுகளுக்கு மறைமுகமாக தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார் என அவரது ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.


 



ALSO READ | TN Assembly Election 2021 Live Updates: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவரது குடும்பத்தினருடன் வாக்களித்தார்


ஆயிரம்விளக்கு தொகுதிக்குட்பட்ட ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் ரஜினிகாந்த் வாக்களித்தார். சென்னை அழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அவரது மகள்கள் ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷராஹாசன் ஆகியோர் வாக்களித்தனர். வளசரவாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் சிவகார்த்திகேயன் வாக்களித்தார்


தேனாம்பேட்டையில் உள்ள எஸ்.ஐ.இ.டி வாக்குச்சாயில் திமுக தலைவர் ஸ்டாலின், மனைவி துர்கா, மகன் உதயநிதி ஸ்டாலின் வாக்களித்தனர். வாக்களித்த பின்னர், அனைவரும் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR