2026 தேர்தல் கூட்டணிக்கு தயராகிறாரா விஜய்... அவர் குறிப்பிடும் சில கட்சிகள் எது..!!
2026 தேர்தலில் அவர் குறிப்பிடும் சில கட்சிகளை எதிர்த்து தான் நம்பும் சில கட்சிகளை ஒன்றிணைத்து களம் காண இருக்கிறாரா நடிகர் விஜய் என்ற கேள்வி பலர் மனதிலும் எழுந்துள்ளது.
நடிகராக இருந்த விஜய் அரசியல் கட்சியின் தலைவராக மாறி இருக்கின்ற சூழ்நிலையில் அவர் பேசுகின்ற அனைத்துமே அரசியலாக பார்க்கப்படுகிறது. அப்படி சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவர் பேசிய சிறிய வார்த்தை பெரிய பேசுபொருளாக ஆகியிருக்கிறது. தமிழக வெற்றி கழகம் சார்பாக 10 மற்றும் 12ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா இன்று நடைபெற்றது.
இந்த விழாவில் பேசிய தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் "தமிழகத்தில் தலைசிறந்த மருத்துவர்கள் பொறியாளர்கள் இருக்கிறார்கள். ஆனால் தற்போதைய தமிழகத்துக்கு தேவை நல்ல தலைவர்கள். தலைவர்கள் என்பது அரசியலில் மட்டுமல்ல அவர் சார்ந்திருக்கின்ற துறையில் தன்னை தலைவராக ஆக்கிக் கொள்வது தான். அந்த அர்த்தத்தில் தான் சொன்னேன் என்றார்.
மேலும், சமூக வலைதளத்தில் நல்லவரை கெட்டவராகவும் கெட்டவரை நல்லவராகவும் காட்டக்கூடிய ஒரு வேலை நடந்து கொண்டிருக்கிறது. சில கட்சிகள் பொய்யான பிரச்சாரத்தை முன் வைக்கிறது. மாணவர்கள் மறைமுக அரசியலில் ஈடுபட வேண்டும் பத்திரிகைகள் ஊடகங்களில் வரக்கூடிய ஒரு செய்தி ஒவ்வொரு ஊடகத்திலும் எப்படி மாற்றப்படுகிறது என்பதையும் உற்று நோக்க வேண்டும் அதேபோல மாணவர்கள் சுய ஒழுக்கத்துடன் போதை பொருட்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டும்" என்று பேசினார்.
மேலும் படிக்க | திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா: ஆளுநர் பட்டம் வழங்கினார்
கடந்த சில நாட்களாகவே இந்த விழாவில் சென்ற ஆண்டு விட இந்த ஆண்டு நிறைய பேசுவார் என சொல்லப்பட்டது. சென்ற ஆண்டு நடிகராக பேசியிருந்தாலும் தற்போதைய சூழ்நிலையில் அவர் அரசியல் கட்சியை ஆரம்பித்து இருப்பதால் அரசியல் குறித்தான ஏதேனும் பேசுவார் என மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாக இருந்தது.
அரசியல் குறித்து அதிகம் பேச விட்டாலும் குறிப்பிட்ட இந்த கருத்து இதில் சில கட்சிகள் பொய் பிரச்சாரங்களை செய்கிறார்கள் என கூறியிருப்பது தான் முக்கியமாக பார்க்கப்படுகிறது. ' யார் அந்த சில கட்சிகள்? ' அவர்களுக்கு எதிரான அரசியலை மேற்கொள்ள இருக்கிறாரா விஜய் என்ற கேள்வி தான் மிகப்பெரிய பேசுபொருளாக மாறி இருக்கிறது.
சமீபத்தில் கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அரசை சமூகவலைதளத்தில் கடுமையாக விமர்சித்து இருந்தார். அதே நேரத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் உள்ளிட்ட ஒரு சில தலைவர்களிடம் நெருக்கம் காட்டி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்ற நிலையில், அவரின் அரசியல் என்ன? யார் அந்த சில கட்சிகள்? என்பது தான் மிகப்பெரிய கேள்வியை அவரது பேச்சின் மூலம் ஏற்படுத்தி இருக்கிறது.
அதே நேரத்தில் 'தமிழ்நாட்டில் போதை பொருட்களின் புழக்கம் அதிகமாகி இருக்கிறது..' 'ஆளும் அரசு தவற விட்டுட்டாங்க அப்படின்னு சொல்ல நான் இங்க வரல அதற்கான மேடையும் இது இல்ல..' என்பதையும் ஒருபுறம் எடுத்துக் கொள்ளத்தான் வேண்டும்.
2026 தேர்தலில் அவர் குறிப்பிடும் சில கட்சிகளை எதிர்த்து தான் நம்பும் சில கட்சிகளை ஒன்றிணைத்து களம் காண இருக்கிறாரா நடிகர் விஜய் என்ற கேள்வி பலர் மனதிலும் எழுந்துள்ளது.
மேலும் படிக்க | செங்கோலை அகற்ற வேண்டும்... சமாஜ்வாதி கட்சியின் கோரிக்கையை நிராகரித்த சபாநாயகர்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ