மாற்றுத்திறனாளி குழந்தைக்கு வீடு வழங்கி அசத்திய தமிழக வெற்றிக்கழகம்..!!
கோவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தெற்கு மாவட்ட இளைஞரணியினர் தளபதி விலையில்லா வீடு வழங்கும் திட்டம் மூலமாக மாற்றுத்திறனாளி குழந்தையின் குடும்பத்திற்கு வீடு கட்டி கொடுத்துஅசத்தியுள்ளனர்..
தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை துவங்கி உள்ள நடிகர் விஜய் தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் செய்வதில் கவனம் செலுத்த துவங்கி உள்ளார்.. அவரது அன்பு கட்டளைக்கு இணங்க தமிழக வெற்றிக் கழகத்தின் கோவை தெற்கு மாவட்ட இளைஞரணியினர், இலவச படிப்பகம்,குருதி கொடை முகாம்,,சாலையோர மக்களுக்கு குளிர் கால போர்வை மற்றும் உணவு வழங்குவது போன்ற மக்கள் நலப்பணிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர்.
இந்த நிலையில்தான் தளபதி விலையில்லா வீடு வழங்கும் திட்டம் மூலம் கோவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தெற்கு மாவட்ட இளைஞரணியினர் தளபதி விலையில்லா வீடு வழங்கும் திட்டம் மூலமாக மாற்றுத்திறனாளி குழந்தையின் குடும்பத்திற்கு வீடு கட்டி கொடுத்து , வீட்டு உபயோகப் பொருட்களையும் வழங்கி அசத்தியுள்ளனர்.
கோவை சுந்தராபுரம் கோண்டி காலனி எனும் பகுதியில் ஒரு பயனாளிகளுக்கு வீடு கட்டி கொடுத்து, அரிசி, மளிகை என வீட்டு உபயோகப்பொருட்களையும் வழங்கியுள்ளனர். இதற்கான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக வெற்றிக் கழகத்தின் தேசிய செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பயனாளியிடம் வீட்டின் சாவியை வழங்கி,வீட்டிற்கு தேவையான பொருட்களையும் வழங்கினார்.
மாற்றுத்திறனாளி குழந்தையை வைத்துள்ள அந்த குடும்பத்தினருக்கு சரியான ஒரு இடம் இல்லாததால் தவித்து வந்த நிலையில்,களத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு செய்த, தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் பாபு, உடனடியாக தனது நிர்வாகிகள் உதவியுடன் சுமார் ஒன்றரை இலட்சம் மதீப்பீட்டில் இலவச வீட்டை வழங்கியுள்ளனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ