திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கோவை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சிங்கை ஜி ராமச்சந்திரனுக்கு ஆதரவாக நடிகை காயத்ரி ரகுராம் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை அவர் கடுமையாக விமர்சித்தார். மத்திய பாஜக அரசு ஜிஎஸ்டி வரியை கொண்டு வந்து மக்களின் ரத்தத்தை உறிஞ்சுவதாகவும் காயத்திரி ரகுராம் விமர்சித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாடாளுமன்ற தேர்தல்


தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் 2024 ஒரே கட்டமாக நடைபெறுகிறது. ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.  இதனையொட்டி அதிமுக, திமுக மற்றும் பாஜக கூட்டணி வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதிமுகவில் கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் சிங்கை ஜி ராமச்சந்திரனுக்கு ஆதரவாக நடிகை காயத்திரி ரகுராம் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தையடுத்த காளிவேலாம்பட்டியில் பிரச்சாரம் செய்தார்.


மேலும் படிக்க | விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நடிகர் விஜய் கட்சி போட்டி? - வந்தது ரகசிய உத்தரவு


திமுக மீது கடும் விமர்சனம்


அப்போது பேசிய நடிகை காயத்ரி ரகுராம், "ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் வருகிறது. யாரும் திருட்டு திமுக மற்றும் திருட்டு பாஜகவிற்கு வாக்களிக்க கூடாது. போன முறை இருந்த 38 எம்பிக்கள் தமிழகத்திற்கும் மக்களுக்கும் எந்த விஷயமும் செய்யவில்லை. பாக்கெட்டில் இருக்கும் பணம் கூட தண்ணி போன்று கரைய மத்தியில் ஆளும் பாஜக அரசே காரணம். அதேபோல் இந்த திருட்டு திமுக, பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் தருவோம் என்று சொன்னார்கள். ஆனால் இதுவரை யாருக்கும் போய் சென்றடையவில்லை. 


அண்ணாமலையை விடக்கூடாது


அதேபோல், வருகின்ற தேர்தலில் வாக்கு சேகரிக்க அண்ணாமலை என்று ஒருவர் வருவார். அவரை இந்த இடத்திற்கு உள்ளே விடக்கூடாது. நான் அந்தக் கட்சியில் இருந்து தான் வந்திருக்கிறேன். அவர்கள் வாயைத் திறந்தாலே பொய். அதேபோல் மக்களின் பணத்தை பிடுங்குவதே அவர்களின் நோக்கம். பெரிய ஆட்கள் ஆனாலும் சரி, சிறிய ஆட்கள் ஆனாலும் சரி அவர்களிடமிருந்து பணத்தை மிரட்டி பிடுங்குவதை அவர்களின் வேலையாக வைத்துள்ளார்கள். அதேபோல் திருப்பூரில் ஜிஎஸ்டி குறித்து கேட்ட பெண்ணை அடித்துள்ளார்கள். அதற்கு பாடம் புகட்டும் வகையில் திருட்டு பாஜகவும் டெபாசிட் இழக்க வேண்டும்." என்று பேசினார்.


மேலும் படிக்க | ஜாபர் சாதிக் வைத்திருந்த தனி நெட்வார்க்... வெளியான பரபர தகவல் - அடுத்த சிக்கப்போவது யார்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ