)
Jaffer Sadiq Enforcement Directorate Latest News: டெல்லியில் கடந்த மூன்று ஆண்டுகளில் 2000 கோடி ரூபாய் போதை பொருள் கடத்தப்பட்ட வழக்கில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் உட்பட இதுவரை ஐந்து பேரை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு இவர்கள் போதை பொருட்கள் கடத்தியதும் சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதில் சட்ட விரோத பண பரிமாற்றம் நடைபெற்றதாக அமலாக்கத்துடைய அதிகாரிகளும் ஏற்கனவே வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டு போதை பொருள் கடத்தல் முக்கிய குற்றவாளி ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்கள் அவருடன் தொழில் மற்றும் போதை பொருள் கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் தொடர்புடைய இடங்களில் கடந்த ஏப்.9ஆம் தேதி சோதனை நடத்தி விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரூ. 40 கோடி வருவாய்...
மேலும் போதை பொருள் கடத்தல் மூலம் ஈட்டிய வருவாயை ஜாபர் சாதிக் எந்தெந்த தொழிலில் முதலீடு செய்துள்ளார், யாருக்கெல்லாம் பணத்தை கொடுத்துள்ளார் என்பதை கண்டறிய அமலாக்கத்துறை அதிகாரிகள் இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் அமலாகத்துறை நடத்திய சோதனையில் ஜாபர் சாதிக்கின் சொத்து ஆவணங்கள், போதை பொருள் கடத்தல் தொடர்பாக சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு இருப்பதாகவும் அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போதை பொருள் கடத்தல் மூலம் 40 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி அதை பதுக்கி வைத்திருந்ததும் அதனை பல்வேறு தொழிகளில் முதலீடு செய்வதற்கான ஆவணங்களையும் கைப்பற்றி இருப்பதாக தெரிவித்துள்ளது.
ரூ. 21 கோடி கருப்பு பணம்
மேலும் அதில் 12 கோடி அளவிற்கு சினிமாவில் முதலீடு செய்துள்ளதும், அதே போல் ரியல் எஸ்டேட் தொழிலிலும் இவர் பணத்தை முதலீடு செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜாபர் சாதிக் கட்டுப்பாட்டில் செயல்பாடில் இல்லாமல் உள்ள ஐந்து தொழில் நிறுவனங்களின் வங்கிக் கணக்கில் 21 கோடி ரூபாய் கருப்பு பணம் வரவு வைக்கப்பட்டு இருந்ததற்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்படும் வருவாயை கையாளுவதற்கு தனி நெட்வொர்க்கை ஜாபர் சாதிக் வைத்திருந்ததாகவும் அது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக தேவைப்பட்டால் சில நபர்களுக்கு சம்மன் அனுப்பி நேரடியாக அழைத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜாபர் சாதிக் - அமீர்
ஜாபர் சாதிக் தமிழ் சினிமாவில் இதுவரை நான்கு திரைப்படங்களை தயாரித்துள்ளார். இந்திரா, மாயவலை, மங்கை, இறைவன் மிகப்பெரியவன் ஆகிய திரைப்படங்கள் இவரின் JSM பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் மங்கை திரைப்படம் ரிலீஸிற்கு தயாராக இருந்த நிலையில், ஜாபர் சாதிக் சிக்கினார். இவர் இயக்குநர் அமீருக்கு மிகவும் நெருக்கமானவர் ஆவார். அமீர் இயக்கி வந்த இறைவன் மிகப்பெரியவன் திரைப்படத்திற்கும், அமீர் நடித்த மாயவலை திரைப்படத்திற்கும் ஜாபர் சாதிக் தயாரிப்பாளராக இருந்துள்ளார். இதை தொடர்ந்து, கடந்த ஏப். 2ஆம் தேதி டெல்லியில் உள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவு முன் ஆஜரான அமீரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ