டிவிட்டரில் டிரோல் ஆன நடிகை மதுவந்தியின் சர்ச்சை வீடியோ
மத்திய அரசு மக்களுக்கு வழங்கியுள்ள நிவாரண நிதி குறித்து கணக்கு சொல்லிய மதுவந்தி டிவிட்டரில் டிரெண்ட் ஆகி விட்டார்.
கொரோனா வைரஸின் ஆபத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா வழக்குகள் நாடு முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. நோயாளிகளின் எண்ணிக்கை 6 ஆயிரம் 412 ஐ தாண்டியுள்ளது, இதுவரை 199 பேர் இறந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 678 புதிய வழக்குகள் மற்றும் 33 இறப்புகள் உள்ளன.
இதன் காரணமாக கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ள நிலையில் அவர்களது அத்தியாவசிய தேவைகளுக்காக மத்திய, மாநில அரசுகள் நிவாரண நிதி உள்ளிட்டவற்றை வழங்கி வருகின்றன. இந்த உத்தரவு வரும் 14ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. மீண்டும் அது நீட்டிக்கப்படலாம் என்று தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், இதுகுறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட ஒய்.ஜி.மகேந்திரனின் மகளும், நடிகையுமான மதுவந்தி, மத்திய அரசு மக்களுக்கு 8 ஆயிரம் கோடி மக்களுக்கு 5 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அவர் தெரிவித்த இந்த கருத்தை பலரும் கிண்டலித்து வருகின்றனர். #8000 கோடி மக்களுக்கு 5000 கோடி ரூபாய் பிரிச்சி கொடுத்தா தலைக்கு 62.5 பைசா வரும் என்று பதிவிட்டு கிண்டலாக கேள்வி எழுப்பியுள்ளனர்.
பிரதமர் மோடி விளக்கு ஏற்ற சொன்னபோது மதுவந்தி பேசி வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டான நிலையில், தற்போது இந்த வீடியோவும் வைரலாகி வருகிறது.