தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான சென்னை மற்றும் கரூரில் இருக்கும் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். காலையில் வந்த அதிகாரிகள் சென்னையில் இருக்கும் அரசு பங்களா மற்றும் வீடுகள், கரூரில் ராமேஸ்வபட்டியில் இருக்கும் வீடுகளிலும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனை நடைபெறும் இடங்களில் துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையினரின் சோதனைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாகவும், சோதனை முடிந்த பின்னரே எதற்காக சோதனை நடத்தப்பட்டது? என்ன நோக்கத்திற்காக சோதனை நடத்தப்பட்டது என்பது குறித்து தெரியவரும் என்று கூறியுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!


இந்நிலையில், சென்னையில் செந்தில் பாலாஜியின் வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய 10 துணை ராணுவப்படை வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே பாதுகாப்பு பணியில் துணை ராணுவப்படையினர் ஈடுபட்டுள்ள நிலையில், கூடுதலாக அவர்கள் வரவழைக்கப்பட்டிருப்பது திமுகவினர் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத்துறை கைது செய்யவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.  சில நாட்களுக்கு முன்பு சென்னை மற்றும் கரூர் உள்ளிட்ட இடங்களில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். குறிப்பாக செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் இடங்களிலும் இந்த சோதனை நடத்தப்பட்டது. 


அப்போது, வருமானம் மற்றும் சொத்து தொடர்பான ஆவணவங்கள் சேகரிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. சில இடங்களில் 8 நாட்களுக்கு மேலாகவும், சிலர் வீடுகளில் 5 நாட்களுக்கும் மேலாகவும் சோதனை நடந்தது. இதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் மேற்கொண்டு சோதனைகள் நடைபெற வாய்ப்பு உள்ளது என பரவலாக பேசப்பட்ட நிலையில், இப்போது செந்தில் பாலாஜி வீட்டிலேயே அமாலாக்கத்துறை சோதனையை மேற்கொண்டிருக்கிறது. செந்தில் பாலாஜி மீது வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. 


அதிமுக ஆட்சியில் போக்குவரத்துறை அமைச்சராக இருந்தபோது அவர் இந்த மோசடியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. அமலாக்க இயக்குனரகம் சார்பில் 2021 ஆம் ஆண்டில், இந்த ஊழல் தொடர்பாக நான்கு வழக்குகளை பதிவு செய்தது. இதில் இரண்டு வழக்குகள் அரசுப் போக்குவரத்துத் துறையில் பேருந்து நடத்துனர்கள் நியமனத்தில் நடந்த முறைகேடுகள் மற்றும் மற்ற இரண்டு வழக்குகள் ஓட்டுநர்கள் மற்றும் இளநிலைப் பொறியாளர்கள் நியமனம் தொடர்பானவை. இந்த வழக்குகளை முறையாக விசாரிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.   


மேலும் படிக்க | ’#செருப்பு_பிஞ்சுறும்_420மலை’ டிவிட்டரில் டிரெண்ட் செய்த அதிமுக - காரணம் என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ