கொரோனா பரவலை கட்டுப்படுத்த திருப்பூரில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருவதாக  மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாட்டு மக்களை பாடாய் படுத்தி எடுத்த கொரோனா தொற்றின் இரண்டாம் அலை, தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. தடுப்பூசி (Vaccination) செயல்முறையும் முழு முனைப்புடன் நடந்துகொண்டிருக்கும் நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளுக்கும் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. 


தமிழ்நாட்டிலும் (Tamil Nadu) இரண்டாம் அலை குறைந்து வருவதால் தமிழக அரசு சில நாட்களாக தளர்வுகளை அளித்து வந்தது. இந்நிலையில் தேசிய அளவில், மருத்துவ வல்லுநர்கள் சிலர் மூன்றாம் அலை வருவதாகவும் அதற்கு உண்டான கட்டுப்பாடுகளை உடனடியாக அறிவிக்கும்படியும்  அரசுகளுக்கு எச்சரிக்கை விடுத்து வந்தனர்.



ALSO READ: COVID-19 Update August 04: இன்றைய கொரோனா பாதிப்பு 1,949; 26 பேர் உயிரிழப்பு


இதற்கிடையில் தான் கொரோனா பரவல் மற்றும் மூன்றாம் அலையை  தடுக்கும் விதமாக  தொழில் நகரமான திருப்பூரில் அந்த மாவட்ட நிர்வாகம் இன்று முதல் சில புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.


அதன்படி திருப்பூரில், அத்தியாவசிய கடைகள் தவிர்த்து மற்ற கடைகள் அனைத்தும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசு மதுபான கடைகளும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.


இதற்கிடையில், நேற்று தமிழ்நாட்டில் 1,949 பேர் புதிதாக கொரோனா தொற்றால் (Coronavirus) பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,67,401 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் நேற்று 189 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 


நேற்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 38 பேர் இறந்தனர். கொரோனா தொடங்கியது முதல் இன்றுவரை தமிழகத்தில் கொரோனா தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 34,197 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 20,117 ஆக உள்ளது.


ALSO READ: CMCHISTN:தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் எப்படி சேர்வது?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR