சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைக்கு 48-ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு மாலை அணிவித்து ஓபிஎஸ்-ஈபிஎஸ் மரியாதை!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ADMK-வின் 48 ஆம் ஆண்டு தொடக்க விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் அதிமுகவினரால் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில், கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இவ்விழாவில், அதிமுக கட்சி கொடியை ஓ.பன்னீர் செல்வம் ஏற்றி வைத்தார். 


இதையடுத்து, அங்கிருந்த MGR மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு இருவரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இருவரும் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். நிகழ்ச்சியில் அவைத் தலைவர் மதுசூதனன், துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம், தம்பிதுரை, அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, பொள்ளாச்சி ஜெயராமன், வைகை செல்வன், முன்னாள் எம்.எல்.ஏ. சமரசம், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் தமிழ் மகன் உசேன், ராஜலட்சுமி, முன்னாள் கவுன்சிலர் சின்னையன், முகப்பேர் இளஞ்செழியன், மின்சாரம் சத்திய நாராயண மூர்த்தி, ராமலிங்கம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல் ஒவ்வொரு மாவட்டத்திலும் விழா கொண்டாடப்பட்டது.