அம்மா உணவகம் என்ற திட்டம்  தமிழகத்தில் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களால் துவங்கப்பட்டது.  ஏழை எளிய மக்கள் பசியை போக்கும் வகையில் மலிவு விலையில் உணவு வழங்கும் இந்த திட்டம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பெரம்பலூர் நகரில், புதிய பேருந்து நிலையம், நகராட்சி அலுவலகத்தை ஒட்டி ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் அதிமுக ஆட்சியில் அம்மா உணவகம் திறக்கப்பட்டது. 


இந்த உணவகத்தில், பெரம்பலூர் நகரில் உள்ள ஏழை எளிய மக்கள் மட்டுமல்லாது  பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும் ஏராளமான பயணிகள் உள்ளிட்ட பொதுமக்களும் நாள்தோறும் உணவு சாப்பிட்டு வருகின்றனர். 


இந்நிலையில் கடந்த ஆண்டு தி.மு.க. அரசு பொறுப்பேற்ற உடன் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அம்மா உணவகத்தில் முன்னாள் முதல்வரின் ஜெயலலிதா புகைப்படம் மற்றும் பெயர் பலகைகள் அகற்றப்பட்ட நிலையில்,  பெரம்பலூர் அம்மா உணவகத்திலும், முன்னாள் முதல்வரின் புகைப்படம் அகற்றப்பட்ட தோடு, பெயர் பலகையில் இருந்த ஜெயலிதாவின் புகைப்படம் முன் அகற்றப்பட்டு அம்மா உணவகம் என்று மட்டும் குறிப்பிடப்பட்டிருந்தது. 


மேலும் படிக்க | அதிமுகவை யார் வழிநடத்த வேண்டும்... சசிகலா சொல்வது என்ன?


இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு திமுக-வினரின் தூண்டுதலின் பெயரில் அம்மா உணவக பெயர் பலகை பயன்படுத்தப்பட்ட டிஜிட்டல் பிளக்ஸ் பேனர் ஒன்றால்  மறைக்கப்பட்டது.


இதனை அறிந்த பெரம்பலூர் மாவட்ட அதிமுகவினர் பெரம்பலூர் அம்மா உணவகத்தை தொடர்ந்து முடக்கும் எண்ணத்தில் செயல்படும் பெரம்பலூர் நகராட்சி மற்றும் தமிழக அரசைக் கண்டித்து பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.டி.இராமச்சந்திரன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள அம்மா உணவகத்திற்கு சென்று, பெயர் பலகையில் மறைக்கப்பட்ட திரையினை அகற்றி அப்புறப்படுத்தினர். 


அதிமுகவினரின் இந்த திடீர் செயலால் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. 


மேலும் படிக்க | தீர்ப்புக்கு பிறகு எடப்பாடியில் சசிகலா எடுத்த சபதம்... ஆதரவாளர்கள் ஆரவாரம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR