விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்க கடமைப்பட்டுள்ளதாகவும், எடப்பாடி பழனிச்சாமியே எதிர்காலத்தில் பிரதமராக தகுதி உள்ளவர் என்றும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

செல்லூர் ராஜூ பத்திரிகையாளர்கள் சந்திப்பு..


அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, இன்று மதுரையில் நடைப்பெற்ற ஒரு விழாவில் பங்கேற்றார். அப்போது அவர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.  மதுரை துவரிமான் பகுதியில் சமுதாயகூடத்திற்கு மேற்கூரை அமைப்பதற்கு பூமி பூஜை போடும் நிகழ்வில் செல்லூர் ராஜூ பங்கேற்றார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், பல விஷயங்கள் குறித்து பேசினார். 


மேலும் படிக்க | பாகுபலி யானைக்கு சிகிச்சை அளிக்க கும்கி யானைகள் வரவழைப்பு!


எதிர்காட்சி கூட்டத்தால் பிரயோஜனம் இல்லை..


முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், “பாட்னாவில் நடைபெற்ற எதிர்கட்சி கூட்டத்தால் பிரயோஜனம் இல்லை. 
உப்புக்கு சப்பாக தான் அந்த கூட்டம் நடைபெற்றுள்ளது. அந்த கூட்டத்தின் தலைவர் யார் என்பது தான் எல்லோரிடமும் போட்டியாக உள்ளது.
ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளர் என்று சொன்ன முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அதைப்பற்றி பேசவே இல்லையே. ராகுலை பிடிக்கவில்லையா? காங்கிரஸ் உடன் உரசல் ஏற்பட்டுள்ளதா?” என்று பேசினார். தொடர்ந்து, “மாநிலத்தில் செல்வாக்கு உள்ள கட்சி தலைமையில் தான் கூட்டணி என முதலமைச்சர் சொல்வது சரி தான்.  அதிமுகவும் அதைத்தான் சொல்கிறது. பாஜக தலைமையில் கூட்டணி என அண்ணாமலை சொல்வது கட்சியை வளர்ப்பதற்காகத்தான். பின்னர் அவரே அந்த கருத்தை மாற்றிக் கொண்டு விட்டார்” என்றும் கூறினார். 


முதலமைச்சராக எடப்படி பழனிசாமிக்கே தகுதியுள்ளது..


மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழகத்திற்கு வருகை தந்தபோது ஒரு தமிழர் பிரதமராக மாற தயாராகி கொண்டிருப்பதாக கூறினார். இது குறித்தும் இன்றைய போட்டியில் செல்லூர் ராஜூ பேசியுள்ளார். “தமிழர் பிரதமராக வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமியை மனதில் வைத்தே அமித்ஷா சொன்னார். 2014ல் லேடியா மோடியா என ஜெயலலிதா கேட்ட போது அவருக்கே மக்கள் வாக்களித்தனர். அதுபோல எடப்பாடி பழனிச்சாமிக்கு இருக்கும் செல்வாக்கை பார்த்து அவருக்கே மக்கள் வாக்களிப்பார்கள்” என்று கூறினார். 


“விஜய் அரசியலுக்கு வருவதில் என்ன தவறு..?”


நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்தும் செல்லூர் ராஜூ பேசினார். அப்போது, “அடுத்த தலைமுறை விஜய் தான். அவர் அரசியலுக்கு வருவதில் என்ன தவறு? ஒரு தமிழராக விஜய் தன்னுடைய சொந்த பணத்தை 13 மணி நேரம் நின்று தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கொடுத்துள்ளார்.  யார் யாரோ  தங்களை பிரதமர் என்றும், முதலமைச்சர் என்றும் சொல்லிக்கொள்கின்றனர். அப்படி இருக்கும்போது விஜய் ஏன் வரக்கூடாது? அவர் அரசியலுக்கு வருவதையும், வளர்வதையும் வாழ்த்த கடமைப்பட்டுள்ளோம்” என்று கூறினார்.  மேலும், “அவர் எங்களுக்கு போட்டியாக வருவாரா என சொல்ல முடியாது.ஆனால் எங்களுக்கு போட்டி திமுக தான்” என்றார். 


“இந்தியாவிலேயே பெரிய மாநில கட்சி அதிமுக தான்..”


தமிழக அரசியல் குறித்து பேசிகையில் செல்லூர் ராஜூ கூறியதாவது..“அதிமுக vs திமுக என்பது தான் தமிழ்நாட்டு அரசியல். இதிலிருந்து மாறுவதற்கு வழியே இல்லை. எத்தனையோ கட்சிகள் வரும் போகும். திமுக vs பாஜக என்று பாஜகவினர் சொன்னால் அதை எடப்பாடி பழனிச்சாமி விட மாட்டார்” என்று கூறினார். மேலும், இந்தியாவிலேயே பெரிய மாநில கட்சி அதிமுக தான் என்றும் அவர் கூறினார். 


“பிரதமாராகும் தகுதி பழனிசாமிக்கே உள்ளது..”


எதிர்கால பிரதமர் குறித்து பேசிய செல்லூர் ராஜூ, வரும் காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து பிரதமராகும் தகுதி எடப்பாடி பழனிச்சாமிக்கு மட்டுமே உள்ளதாக கூறினார். “மோடி பிரதமராவார் என யாராவது நினைத்தார்களா? அவர் முதலமைச்சராக ஆவார் என எதிர்பார்த்தார்களா? அவர் ஒரு சாதாரண ஆர்.எஸ்.எஸ். தொண்டராக இருந்தவர். அவருடைய உழைப்பால் உயர்ந்தார். அதுபோல எடப்பாடி பழனிச்சாமியும் உயர்வார்” என்றும் அவர் தன் கூற்றுக்கு விளக்கம் கொடுத்தார். 


மேலும் படிக்க | உளுந்தூர்பேட்டை: தண்ணீர் குடிக்க குடத்திற்குள் தலைவிட்டு மாட்டிகொண்ட நாய்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ