கடைசி நேரத்தில் மாறிய காட்சிகள்... அதிமுக பொதுக்குழுவில் என்ன நடக்கப்போகிறது?
பரபரப்பான சூழ்நிலையில் வானகரத்தில் அதிமுகவின் பொதுக்குழு இன்று கூடவிருக்கிறது.
அதிமுகவுக்குள் எழுந்திருக்கும் ஒற்றைத் தலைமை பிரச்னை அக்கட்சிக்குள் மீண்டும் பிளவை ஏற்படுத்துமோ என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது. ஆனால் பிளவை விரும்பாத மூத்த நிர்வாகிகள் ஓ. பன்னீர்செல்வத்துக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் இத்தனை நாளாக தூது சென்றனர்.
இருந்தாலும் ஒற்றைத் தலைமைக்கு ஓபிஎஸ் இசைந்துவரவில்லை. இதனால் அவரது ஆதரவாளர்களையும், மாவட்ட செயலாளர்களையும் வளைக்கும் கோதாவில் எடப்பாடி தரப்பு இறங்கியது.
அதற்கேற்றார்போல் முன்னொரு காலத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்களாக கருதப்பட்ட மாஃபா பாண்டியராஜன், வைத்திலிங்கம், கே.பி. முனுசாமி உள்ளிட்டோர் எடப்பாடிக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றனர்.
இந்தப் பொதுக்குழுவில் எப்படியாவது பொதுச்செயலாளர் நாற்காலியில் அமர்ந்திட வேண்டும் என இபிஎஸ் கடுமையாக செயலாற்றிக்கொண்டிருக்கும் சூழலில் ஓபிஎஸ் தரப்பினர் நீதிமன்றத்தை நாடினர்.
வழக்கை விசாரித்த தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பொதுக்குழுவுக்கு தடையில்லை என உத்தரவிட்டார். இதை எதிர்த்து அதிமுக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் (ஓபிஎஸ் தரப்பு) மேல்முறையீடு செய்து இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.
அதனையடுத்து நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் முன்பு நேற்று நள்ளிரவு வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் ஒத்துக்கொண்ட 23 தீர்மானங்களைத் தவிர புதிய தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றப்படக்கூடாது. புதிய தீர்மானங்கள் குறித்து ஆலோசனை செய்யலாம் ஆனால் எந்த முடிவையும் எடுக்கக்கூடாது என உத்தரவிட்டனர்.
நீதிபதிகளின் இந்தத் தீர்ப்பு இபிஎஸ் அணிக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. அதேசமயம், எடப்பாடியின் எந்த மூவையும் தடுக்க முடியாமல் நின்ற ஓபிஎஸ்ஸுக்கும் அவரது தரப்புக்கும் இந்தத் தீர்ப்பு நிம்மதியை கொடுத்திருக்கிறது.
இந்த விவகாரம் இவ்வளவு நாள்கள் எடப்பாடியின் கைகளில் இருந்ததால் பொதுச்செயலாளராகவிடலாம் என்ற கனவில் இருந்தார். ஆனால், தற்போது நீதிமன்றம் தலையிட்டு சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளதால் இன்றைய பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் தீர்மானம் நிறைவேற்றப்படாது. இதனால் இன்றைய பொதுக்குழுவில் பொதுச்செயலாளராகிவிடலாம் என்ற எண்ணம் எடப்பாடி பழனிசாமிக்கு கானல் நீராகும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸில் இன்று காலை 10 மணிக்கு கூடவிருக்கும் பொதுக்குழுவில் பங்கேற்அ 2,750 உறுப்பினர்களுக்கு மட்டுமே அழைப்பு விடப்பட்டிருக்கிறது.
கூட்டத்திற்கு வரும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதுடன், ஆதார் அட்டை கட்டாயம் கொண்டுவர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. காலை 10 மணிக்கு முதலில் செயற்குழு கூட்டமும், அதைத்தொடர்ந்து பொதுக்குழு கூட்டமும் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்க
மேலும் படிக்க | அதிகாரப் போட்டி! அரசியல் குழப்பம்! முதல்வர் உத்தவ் தாக்கரே பதவி விலகுவாரா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR