நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடுவதற்கான கூட்டணியை முடிவு செய்வது குறித்தும், கட்சிகலூடன் பேச்சு வார்த்தை நடத்தும் பணியிலும் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளன. கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளும், முடிவுகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியுடன் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி சந்தித்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதிமுக மற்றும் புதிய தமிழகம் கட்சி இடையே, நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் கூட்டணி குறித்து இன்று முதல் கட்ட பேச்சு வார்த்தை நடைபெற்றது என தகவல்கள் வெளியாகி உள்ளன. நேற்று தேமுதிகவுடன் பேச்சு வார்த்தை நடந்த நிலையில், இன்று புதிய தமிழகம் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


தென்காசி தொகுதி கள நிலவரம் காரணமாக, அதிமுக கூட்டணியின் பக்கம் கிருஷ்ணசாமி செல்ல விரும்புகிறார் என்று முன்னதாக தகவல்கள் வெளியாகியது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடி அவர்களையும், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் நட்டா அவர்களையும், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் திரு கிருஷ்ணசுவாமி சந்திக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக டாக்டர் கிருஷ்ணசாமி, எந்த அணியுடன் கூட்டணி சேரப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.


மேலும் படிக்க | சினிமாவை மிஞ்சிய கொலை சம்பவம் - வண்டலூர் திமுக ஒன்றிய குழு துணை தலைவர் படுகொலை


கடந்த சில ஆண்டுகளாக பாஜக உடன் இணைந்து செயல்பட்டு, அதற்கு தொடர்ந்து தனது ஆதரவை வழங்கி வந்த கிருஷ்ணசாமி, ஆர்எஸ்எஸ் நடத்திய மாநாட்டிலும் சிறப்பு விருந்தினராக கொண்டார். எனினும் தென்காசி தொகுதியில் போட்டியிட விரும்பும் கிருஷ்ணசாமிக்கு, பாஜக அத்த தொகுதியில் தனது வேட்பாளரை நிறுத்த விரும்புவதால், அதிமுக பக்கம் சாய்வார் என பேசப்பட்டது. தென்காசி தொகுதியில் போட்டியிட, பாஜக ஆயத்த பணிகளை மேற்கொண்டு வருவதால், அதிருப்தி அடைந்த அவர் பிரதமர் மோடியை சந்திக்க வில்லை என கூறப்படுகிறது.


முன்னதாக, புதிய தமிழகம் கட்சியின் அரசியல் உயர்மட்ட குழு கூட்டம் கோவை குனியமுத்தூரில் நடந்தது. நாடாளும்ன்ற தேர்தலில் குறித்து ஆலோசனை செய்யப்பட்ட இக்கூட்டம் டாக்டர் கிருஷ்ணசாமி இல்லத்தில் நடந்தது. பாராளுமன்ற தேர்தலில் கட்சி யாருடன் கூட்டணி வைப்பது குறித்து முடிவெடுக்க தலைவர் கிருஷ்ணசாமிக்கு அதிகாரம் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


மேலும் படிக்க | தமிழ்நாட்டில் பாஜக ஆட்சியா? மக்கள் முடிவு செய்வார்கள் - திமுக அமைச்சர்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ