ஓ.பன்னீர் செல்வம், சி.வி.சண்முகம் உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் கைது
திமுக அரசு தனது முடிவில் உறுதியாக இருந்து நிறைவேற்றியதால் அதிமுக எம் எல் ஏக்கள் வெளி நடப்பு செய்ததோடு, சட்ட மன்ற கூட்டம் நடைபெறும் சென்னை கலைவாணர் அரங்கம் அருகே உள்ள சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலை கழகத்துடன் இணைக்கும் சட்ட மசோதா, சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, இதற்கான சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். இதற்கு அதிமுக ஆரம்ப கட்டம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இந்த முயற்சியை கைவிடக் கோரி சட்டமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர். பின்னர் அதிமுக எம் எல் ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில் எதிர்ப்பு தெரிவித்து போராடிய ஓ.பன்னீர் செல்வ, சிவி சண்முகம் ஆகிய அதிமுக எம்.எல்.ஏக்கள் கைது செய்யப்பட்டனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஜெயலலிதா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சேர்க்கை குறைவாக இருப்பதால், அதனை காரணம் காட்டி விழுப்புரம் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களை சேர்ந்த கல்லூரிகளை, 100 ஆண்டுகள் புகழ் மிக்க அண்ணாமலை பல்கலைக்கழகத்தோடு இணைக்க திமுக அரசு முடிவெடுத்தது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் உள்ள அந்த பல்கலைக் கழகத்தை அண்ணாமலை பல்கலைக் கழகத்தோடு இணைக்கும் முடிவுக்கு அதிமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது வந்தது.
ALSO READ | தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
ஆனால், திமுக அரசு தனது முடிவில் உறுதியாக இருந்து நிறைவேற்றியதால் அதிமுக எம் எல் ஏக்கள் வெளி நடப்பு செய்ததோடு, சட்ட மன்ற கூட்டம் நடைபெறும் சென்னை கலைவாணர் அரங்கம் அருகே உள்ள சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், திமுக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். சாலை மறியலில் ஈடுபட்டதால், வாகன போக்குவரத்து தடைபட்டு அங்கு பெருமளவு கூட்டம் கூடி பரபரப்பு ஏற்பட்டது. எனவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்ட ஓ.பன்னீர் செல்வம் மற்றும் சி.வி.சண்முகம் உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் கைது செய்தனர்.
ALSO READ வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம்: முதல்வருக்கு வைகோ பாராட்டு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR