கத்தி போனதும் வாழ் வந்தது என்பன போல சென்னையில் மழை ஓய்ந்தவுடன் தற்போது பனிப்பொழிவு துவங்கியது. வங்கக் கடலில் உருவான புயல் காரணமாக ஏற்பட்ட மலை இரு தினங்களுக்கு முன்னதாக ஓய்வு பெற்றது. இந்நிலையில் சென்னையில் மழை வெள்ளம் வடியாத சூழலில் தற்போது சென்னையில்  பனிப்பொழிவு துவங்கியுள்ளது. ஆந்திராவிலிருந்து வரும் சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலையில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். ஆந்திராவில் இருந்து சென்னைக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் மற்றும் லாரி 4 சக்கர வாகனங்கள் இருசக்கர வாகனங்கள் என சென்னைக்கு வரும் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள் ஆகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | மிக்ஜாம் புயல் எதிரொலி! 3வது நாளாக இன்றும் இந்த வசதிகள் கிடைக்காது!


பனிப்பொழிவு காரணமாக அருகிலுள்ள வாகனங்கள் தெரியாமல் தங்களது வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்களை இயக்கி வருகின்றனர். மேலும் சென்னையில் பல இடங்களில் மின்சார தட்டுப்பாடுகள் உள்ளதால் மின்சாரம் இல்லாமல் பனிப்பொழிவில் வாகனங்களை முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி மெதுவாக சென்று வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.  இதேபோன்று சென்னைக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து நிவாரண பொருட்கள் ஏற்றி வரும் வாகனங்கள் வந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.  


நிவாரண பணிகள்


மழை நிவாரண பணிகள் முழு வீச்சில் நடந்து வருவதாக தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.  சென்னை, புளியந்தோப்பு பகுதியில் அதிக மழைநீர் தேங்கிருப்பதாகவும் இது தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளமாறு ஞானபானு என்பவர் தலைமை நீதிபதி அமர்வு முன்பு முறையீடு செய்தார்.  தமிழ்நாடு அரசு பிளீடர் முத்துக்குமார் ஆஜராகி, புயல் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டதையடுத்து, நான்கு நாட்கள் முன்பே போர்க்கால நடவடிக்கையாக அரசு அனைத்து ஏற்பாடுகளும் செய்துள்ளது.  மேலும் வெள்ள பாதிப்பு பகுதியில் மழைநீர் வெளியேற்ற அனைத்து நடவடிக்கையும் மேற்கொண்டு வருவதாகவும், நிவாரண மற்றும் மருத்துவ முகாம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளின் துரித நடவடிக்கையாக அரசு செய்து வருவதாகவும் தெரிவித்தார்.


மேலும் சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களிலும் வெள்ள பாதிப்பு மற்றும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவின் அடிப்படையில், 14 அமைச்சர்களை மற்றும் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அனைத்து அரசு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  ஆவின் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி மக்களுக்கு சென்றடைய அனைத்து ஏற்படும் செய்து வருவதாகவும், தேசிய பேரிட மீட்பு படையினர், மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அரசு பிளீடர் முத்துக்குமார் தெரிவித்தார்.  இதை ஏற்றுக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், மனுதாரர் ஏதாவது குறை இருந்தால் அரசிடம் தெரிவிக்குமாறு உத்தரவிட்டனர்.


மின் கட்டணம்


சென்னை மக்கள் மின் கட்டணம் செலுத்த அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. புயல் பாதித்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த டிச.15ம் தேதி வரை அவகாசம் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.  மின் கட்டணம் செலுத்த நாளை கடைசி நாளாக இருந்த நிலையில் கூடுதல் அவகாசம் வழங்கியது தமிழக அரசு.  கடந்த 3 நாட்களில் அபராதத்துடன் கட்டியவர்களுக்கு அடுத்த மாதம் கணக்கெடுப்பில் சரிகெட்டப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க | 'உடனடியாக நிதி வழங்கவும்...' பிரதமர் மோடிக்கு, ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் என்னென்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ