தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர்,  திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் 6 அக்டோபர் மற்றும் 9 அக்டோபர் என இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஊரக உள்ளாட்சித் தேர்தல் தேதி (Local Body Election) அறிவிக்கப்பட்டதை அடுத்து, தேமுதிக நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்தது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைத்திருந்த தேமுதிகவும் தற்போது தனித்துப் போட்டியிடுகிறது. உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக (DMDK) தனித்தே போட்டியிடும் என அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் (Vijayakanth) அறிவித்துள்ளார். தேமுதிகவுக்கு வட தமிழகம, விழுப்புரம், கள்ளக்குறிச்சி போலரா இடங்களில் சற்று செல்வாக்கு இருக்கிறது. இந்த தேர்தலில் கட்சியின் இருப்பை தேமுதிக காட்டியாக வேண்டியிருக்கிறது.


ALSO READ | AIADMK vs PMK  பிரேக் அப்! ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்து போட்டி


இதனால்தான் தேமுதிக தனித்துப் போட்டியிடும் என விஜயகாந்த் அறிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியதாவது., 


9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடுகிறது. தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ள தொண்டர்களும், நிர்வாகிகளும் 16,17 ஆகிய 2 நாட்கள் மாவட்டக் கழக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுவை பெற்று பூர்த்தி செய்து அளிக்க வேண்டும்.



உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட அடிப்படை உறுப்பினராக இருப்பது அவசியம். மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் விருப்ப மனுவுக்கு ரூ.4,000, ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு ரூ.2,000 கட்டணமாக வசூலிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பா.ம.க. திடீரென தனித்துப் போட்டி என அறிவித்தது. உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள 9 மாவட்டங்களில் ஏழு மாவட்டம் வட மாவட்டத்தை சேர்ந்தவை. இங்கு வன்னியர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். வன்னியர்கள் ஓட்டு எங்களுக்கு தான் என்று அரசியல் கட்சி நடத்தி வரும் பாமக, கூட்டணி கட்சியுடன் கரம் கோர்த்து போட்டியிட்டால், குறைந்த இடங்கள் தான் கிடைக்கும். அதுவே தனித்து போட்டியிட்டால் அனைத்து இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தலாம் என்ற கணக்கில் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது. 


ALSO READ | 9 மாவட்டங்களில் 2 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல்: மாநிலத் தேர்தல் ஆணையர் அறிவிப்பு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR